பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 l கிறித்தவருடன் தொடர்பு பற்றிய ஆவணக் குறிப்புக்கள் சிலவே. துளஜா அரசர் சரபோஜி அரசரை ஸ்வார்ஷ் பாதிரியார் ஆதரவில் விட்டிருத் தார் என்றும், ஸ்வார்ஷ் பாதிரியாரிடத்தில் சரபோஜி மிக்க அன்புடன் இருந் தார் என்றும், அப்பாதிரியார் படுத்த படுக்கையில் இருந்தபொழுது அவரைத் தான் பார்ப்பது போன்று ஒரு படிவம் தஞ்சாவூர் ஸ்வார்ஷ் மாதாகோவிலில் சரபோஜி II அமைத்தார் என்றும் சொல்லப்படுகிறது. சிவகங்கைப் பூங்காவி லுள்ள ஸ்வார்ஷ் சர்ச்சு என்ற கிறித்தவ தேவாலயம் சரபோஜியின் உதவியால் எடுப்பிக்கப்பெற்றது என்று ஒராசிரியர் கூறுவர்." ஆனால் அது கி. பி. 1779இல் ஸ்வார்ஷ் பாதிரியாரால் எடுப்பிக்கப்பட்டது என்று தஞ்சை ஜில்லா கெஜட்டியரில் சொல்லப்பட்டுள்ளது." ஸ்வார்ஷ் பாதிரியின் வரலாற்றுக் குறிப்பு என்ற நூல் 10-3-1779இல் அந்தக்கோயில் எடுப்பிக்க அடித்தளம் போடப்பெற்றது என்று கூறும்." சரபோஜி II 1798இல் அரசு எய்தினர் ; எனவே அதனைச் சரபோஜி அமைத்தார் என்பது பொருந்தாது. சரபோஜி மன்னர் கிறித்தவரிடத்து அன்பாக இருந்தமை மிகத் தெளி வாகத் தெரிகிறது. கி. பி. 1811இல் மருதப்ப மேஸ்திரி என்பவரைத் தரங்கம் பாடிக்கும் நாகப்பட்டினத்துக்கும் அனுப்பிக் கிறித்தவக் கோயிலின் மாதிரியைப் பார்த்துவரச் செய்தார்.8 - - - o தரங்கம்பாடியில் இருந்த மேஸ்தர் ஜ்யான் பாதிரி ஒரு ( ஆங்கிலப் ) பள்ளி நடத்திவந்தார். அதை நடத்துவதற்கு மாதம் 1க்கு 20 புலி ஹோன்னம் கொடுத்ததாக 1819க்குரிய ஒரு ஆவணக்குறிப்பும்", ஒவ்வொரு மாதமும் ரூ. 30 கொடுத்துவந்ததாக 1846, 1853க்குரிய ஆவணக்குறிப்புக்களும் உண்டு.: தஞ்சாவூர்க் கோட்டையிலேயே பாதிரியாரிடம் மாதம் 1க்கு 100 கலம் விதம் 1852 ஜூலை 1ஆம் தேதி முதல் கொடுக்கப்பட்டு வந்தது என்று வேறொரு ஆவணம் பகர்கிறது." மாயூரத்திலிருந்த பர்ன்கடிக் என்பவருக்கு ஆண்டொன் றுக்கு ரூ. 200 தரப்பெற்று வந்தது." இரண்டாம் சரபோஜி, இரண்டாம் சிவாஜி 199. " He (Serfoji II) commemorated his love and esteem for the Father (Schwartz) by constructing a Church near Sivaganga Garden, Thanjavur. The marble plaque installed in the church depicts the visit of the Raja to see the ailing, father Schwartz " - P. 14, Saraswathi Mahal, R. Jayaraman, 200. ” The Schwartz Church stands in the North east corner of the fort. It was founded in 1779 by Schwartz who resided principally in Tanjore from 1778 until his death" - P. 272, Tanjore Gazetteer. 201. On 10th of March 1779 the General laid the foundation stone nine feet deep - P. 341. It is built upon the plan of the church at Trichi being 90 ft. long and 50 ft, broad - P. 369, Memoirs of Schwartz by Pierson. 202, 2-44. 203. ச. ம. மோ. த. 18-84 204. 27.45 ச. ம. மோ, ச. 28.48 206, 1-185 206, 4-251 ; ச. ம. மோ. க. 4.45