பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 பிரபோத சந்த்ரோதய நாடகம்", கிருஷ்ண ஜனன நாடகம்", முத்ரா ராகூடிஸ் நாடகம்", பிரதாபராம குறவஞ்சி", மித்ரவிந்தாபரிணயம்-துருவசரித்திர நாடகம்-உஷா கல்யாணம் - சீதா கல்யாணம் - மாயாவதி பரிணயம் - யயாதி சரித்திரம்' ஆகியவை பிரதாபசிங்கரால் எழுதப்பெற்றனவாதல் வேண்டும். இரண்டாம் துளஜா (1763-1767) பிரதாபசிங்கரின் மகன் ஆவர். இவருக்குப் பிறகு ஆட்சியெய்தியவர் இவர் தம்பி அமரசிங்கர் (1787-1798). இவ்விருவரும் இசை நூல்கள் எழுதியமைக்குக் கிடைத்துள்ள மோடி ஆவணத் தமிழாக்கக் குறிப்புக்களில் சான்று கிடைக்கவில்லை. 事 இரண்டாம் சரபோஜி (1798 - 1832) தேவேந்திர குறவஞ்சி ' என்பது இரண்டாம் சரபோஜி இயற்றிய குறவஞ்சி நாடகம் ஆகும்." சரபேந்திர பூபால குறவஞ்சி நாடகம் ' என்பது சிவக்கொழுந்து தேசிகரால் பாடப்பெற்றது." இவரியற்றியனவாகச் சில நூல்கள் மோடி ஆவணத் தமிழாக்கத்தினின்று அறியவரும். அவ்ை ராதா கிருஷ்ண நாடகம்- மோஹினி மஹேஸ் பரிணய நரடிகா," கணேச விஜய நாடகம், கணேஷ விஜயாவித்யன் நாடகம், மீனாட்சி பரிணயம், கணேச விலார்ணவ நாடகம்: அ எனபனவென்று பின்வரும் குறிப்புக்களால் அறியப் பெறும் : ராதாகிருஷ்ண நாடகம் - சரபேந்திர பூபால க்ருதம் - ராதாகிருஷ்ண விலாஸ் வர்ணனம் - பக்கம் 80' மா - கணேச விஜய நாடகம் - ஸ்ரபேந்தர க்ருதம்-கணபதி சரித்திரம்10 வீதம் பக்கம் 44 ' மா - கணேச விஜயாபித்யன் நாடகம், ஸ்ரபேந்திர க்ருதம் - தைலங்கபக்கம் 106 ' "மா - கணேச லீலார்ணவ நாடகம் - தநைவக்ருதம்-தைலங்க-பக்கம் 22' மா. பா. மீனாகூஜி பரிணயம் - ஸ்ரபேந்த்ர க்ருதம் - தைலங்க பக்கம் 36' மேற்கண்ட குறிப்புக்களில் சரபேந்திர பூபால, ஸ்ரபேந்திர என்றுள்ளமையின் இவை இரண்டாம் சரபோஜிக்குரியன என்று கொள்ளப்பட்டன. 63. 12-288 ( எண் 2250 ) 64. 12-288 எண் 2387) 65. 12-287 எண் :247 ) 66. 12-289 (எண் 2885) 67. 12-289 எண் 8887-2891) 68. P. 114, Tanjore as a seat of Music; 12-289 எண் 2884) 69. 12-299 எண் 2487 ) 70. 12.289 எண் 2879, 2880) 71. 12-289 எண் 2892 ) 72. 2-290 எண் அரே 58 ) 73, 2-291 ( बाइट्रा 2408) 73.அ. 2-290 ( அரே 51)