பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223 இரண்டாம் சிவாஜி (1832 -1855) அன்னபூர்ணாம்பா நாடகம் என்பது சிவாஜி II எழுதியது என்று தெரி கிறது. " தை. பா. அன்னபூர்ணாம்பா நாடகம் - சிவாஜி மஹாராஜ் க்ருதம் - - தைலங்க, பக்கம் 96 ' என்ற குறிப்பால்' இது அறியப்பெறும். இசை வல்லுநர்கள் மராட்டிய அரசர்கள் சிறந்த இசை நாடக நூல்களை எழுதிமையோடு பல இசைவல்லுநர்களையும் ஆதரித்துள்ளார்கள். அவர்களுள் ஒருவர் வீணை காள ஹஸ்தி " அய்யர் என்பவர் ஆவர். இவருக்கு இரண்டாம் துளஜா பெரன்னுரர் கிராமத்தில் ஸர்வமானியம் (முற்றுாட்டாக) நிலம் ஒரு வேலி, எட்டு மா, 1771இல் அளித்தார்". இவ்வரசர் காலத்திலேயே வீணை குப்பையா என்றொருவர் இருந்தார். அவருக்கு கி. பி. 1782இல் சருவமானியம் அளிக்கப்பெற்றது". " வீணை குப்பையா, லகஷ்மி நரசிம்மையா, சுப்ராயலு, அனந்தையா, சேஷய்யா முதலிய பதினான்கு பேருக்குத் தருமம் செய்ய ஆடுதுறை மாகாணத் தில் கடைகள் பங்குகள் சர்வமானியமாகக் கொடுக்கப்பெற்றன. " என்ற மோடி ஆவணத்தமிழாக்கக் குறிப்பால் பல இசை அறிஞர்கட்குக் கி. பி. 1855 இல் உதவியளிக்கப்பெற்றது என அறியவருகிறது. இவர்களுள் வீணை குப்பையர் மிக்க கீர்த்தி வாய்ந்தவர். இவர் நாராயண கெளள ராகத்தை ஆலா பனம் செய்வதில் மிக்க திறமையுள்ளவர். இவருக்கு 8 மக்கள் இருந்தனர் : அவர்களுள் திருவொற்றியூர் தியாகய்யர் ஒருவர்". வீணை இராமசாமி என்பவர் 1813க்குரிய ஆவணக்குறிப்பில் காணப் பெறுகிருர்’ ஜகந்ாாத பட் கோசுவாமி என்பாருக்குக் கி. பி. 1778இல் அதாவது இரண்டாவது துளஜா காலத்தில் சர்வமான்யம் கொடுக்கப்பட்டதாக ஒரு குறிப்பு உள்ளது."அ 74, 2-291 எண் 2409) 75. 3-265; Tanjore as a seat of Music, page 101; 109, oustorf orous's பெரன்னூர் என்று மொழிபெயர்ப்பாளர் எழுதினர் போலும். 76. ச. ம. மோ. த. 10-28 77. Tanjore as a seat of Music, P. 219 78. ச. ம. மோ, த. 2-22; இவர் மைசூர் வேங்கடராமையர் குமாரர்; இவரும் இவர் சகோதரர் லட்சுமனையரும் வீணை சுகமாய் வாசிப்பார்கள் " என்று கருணாயிர்க சாகரம் என்ற நூல் பக். 100இல் உள்ளது இவரைப்பற்றியதாகலாம். 78.அ. ச. ம. மோ. த. 29-8