பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 -- லாவணி என்பது ஒருவகை இசைப்பாடல் பொது மக்களின் மனத்தைக் கவரவல்ல நாட்டுப்புறப் பாடல் வகையைச் சார்ந்தது; தஞ்சை மராட்டியர் காலத்துப் பெருவழக்கில் இருந்தது. இரு கட்சிகள் ஒரு கட்சி ஒரு கருத்தைப் பற்றி வாதிடும் ; பிறிதொரு கட்சி அதனை மறுத்து வாதிடும் ; கட்சித்தலைவர் உடனுக்குடன் பாடல் புனைந்து பாடும் திறமையுடையவராய் இருப்பார். லாவணி பாடுவதில் ஆண்களே பங்கு கொள்வர்”அ என்பது பெருவழக்கு. இது, லாவணிப் பாட்டுப் பாடுகிற் சிப்பாய்கள் 8 பேருக்கு இரவில் சாப்பாடு அளிக்கிறது'ஆ என்ற குறிப்பால் அறியப்பெறும். அங்ங்னம் பாடுங்கால் பெண்கள் ஆடுவதும் உண்டு என்று அறியப்பெறுகிறது. இது, -- லாவணிப் பாட்டில் ஆடுகிற பிராமணர்களின் பெண்கள் 2க்கு வருஷப் பிறப்பு வரையில் தினப்படி இரவில் சாப்பாடு ' 'க என்பதால் உறுதியெய்தும். இரவு முழுதும் விடிகிறவரை லாவணி நடைபெறும்; ஆகையால் இரவு உணவு அளிக்கப்பெற்றனர் போலும். ஆதரிக்கப்பெற்ற புலவர்கள் தஞ்சை மராட்டிய மன்னர்களால் ஆதரிக்கப்பெற்ற புலவர்கள் பலர் , அன்னோர் எழுதிய நூல்களும் பலவாம். லாஹஜி ராஜவிலாஸம் என்பது சேஷாசலபதி என்ற புலவரால் பாடப் பெற்றது என்று முன்னரே கூறப்பெற்றது.” திரா. பா. கோரவஞ்சி நாடகம்-முத்துகவிராய க்ருதம்-தைலங்க-பக்.72" என்ற குறிப்பினால் தமிழ் மொழியில் ஸாஹஜி பேரில் முத்துக்கவிராயர் 'என்னும் புலவரால் இக் குறவஞ்சி நாடகம் எழுதப்பெற்றது என்றும், அது தெலுங்கு எழுத்தில் எழுதப்பெற்றது என்றும் அறியவரும். இது ஸாஹஜி மன்னர் மீது பாடப்பெற்ற குறவஞ்சி." ஸாஹஜி, அவர் மகன் முதலாம் சரபோஜி ஆகியோர் காலத்தில் வாழ்ந்த புலவர் கிரிராஜகவி எனப்பெற்றார். இவர் ஸாஹஜி பேரில் லாஹராஜ கல்யாணம்" என்ற நூலைப் பாடியமை முள்னரே கூறப்பட்டது." 86.s., Tanjore as a seat of Music, P.360 86.ஆ 1.188 87. அடிக்குறிப்பு 18 காண்க 88. 12-290 எண் 2394) 89. ஐந்து தமிழ் இசை நாடகங்கள் ' என்ற பெயரில் சரஸ்வதிமகாலில் ஒரு நூல் வெளி யிடப்பெற்றுள்ளது. அவ்வைந்து நூல்களுள் இக்குறவஞ்சி நாடகமும் ஒன்று ; பிற நூல்கள் :1-பூலோக தேவேந்திர விலாசம் ( ஸாஹஜி); 2. சந்திரிகா ஹாலை நாடகம்; 8. விஷ்ணுசாகராச விலாஸம், 4. காவேரி கல்யாணம் என்பனவாம். 90, 12.292 (எண் 2416) அடிக்குறிப்பு 51