பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 ஸாஹஜி காலத்தில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர் திரயம்பக பட் என்பவர் ஆவர்." இவர் எழுதிய மராட்டிய நாடகம் இராஜகன்யா பரிணய நாடகம்" என்பதாகும். பகவந்தகவி என்றொருவர் ஏகோஜி II காலத்தவர் ஆவர். இவரியற்றிய நூல்களுள் ஒன்று ராகவாப்யுதய நாடகம்" என்பதாகும். மன்னர் முன்னிலையில் நடித்தல் இதுகாறும் குறிப்பிடப்பெற்ற நாடகங்கள் பலவும் மராட்டிய மன்னர் முன்னிலையிலே நடிக்கப்பெற்றன என்பதற்குச் சான்றுகள் காணப்படுகின்றன. சுஹர்ஸன் ஆண்டு 1254 அதாவது கி. பி. 1853இல் இரண்டாவது சிவாஜி காலத்தில் விநாயக சதுர்த்தி விழாவில் 22 நாட்கள் நாடோறும் சராசரி ஒரு நாடகம் வீதம் பல நாடகங்கள் நடிக்கப்பெற்றன. ராமச்சந்திர கோஸ்வாமி என்பாருடைய கதை நடந்தது. நாடகசாலையில் சில பெண்கள் நாட்டியம் ஆடினர்." நடைபெற்ற நாடகங்கள் ஆவன ; சமந்தோபாக்யான-நாடகம்: சுபத்ரா.கல்யாண நாடகம், சசி புரந்தர நாடகம்,' கோவர்த்தன நாடகம்,: சர்வாங்க சுந்தரி நாடகம், ரதி கல்யாணம், விக்னேசுவர கல்யாணம்,: சதிபதி தான விலாஸம், சாந்தா கல்யாண நாடகம், சரஸ்வதி கல்யாணம்,' பஞ்ச பாஷா நாடகம், சங்கரநாராயண விலாஸம்" என்பனவாம். இவற்றுள் பஞ்சபாஷா நாடகம் பற்றி மோடி தமிழாக்கக்குறிப்பு:" வேறொன்றினால் அறியப்பெறும். இது ஒவ்வொரு பாத்திரம் ஒவ்வொரு 105. P. 712 Vol. II, A Descriptive Catalogue of Marathi Mss. 106. 12.287 எண் 2870) 107. 12-231 (எண் 2290 ) 108. 12-864, 865, 866 109. இது பிரதாபசிம்மன் எழுதியது ; மராட்டிய மொழி; தெலுங்கு எழுத்து; தெலுங்குச் சுவடி பி. 15298 / 28. 110, இது இரண்டாம் சரபோஜி எழுதியது ; மராட்டிய மொழி; தெலுங்கு எழுத்து தெலுங்குச் சுவடி 15811/87 111. இது சாஹஜி எழுதிய யகடிகானங்களில் ஒன்று (பக். 81, Tanjore as a Seat -- of Music ) - - 112. இது கோவர்த்தனோத்தார நாடகம் எனப்பெறும் : ஸாஹஜி எழுதியது; மராத்தி மொழி : 12-286 (எண் 2858) 113. 12-286 (எண் 2854) இது கிரிராஜகவி எழுதியது 18-4 114. 12-286 (எண் 2851) 115. 12.287 (எண் 2867 ) 116. 12-286 (எண் 2856) 117. 12.291 (எண் 2401) 118. 12-290 (எண் 8800) 119. 12.287 (எண் 2868) 18.6, 7 120, 18–5, 6 -----