பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 துறையில் பெண் வேஷம் போட்டுக்கொள்பவர் உலேன்கான் என்பவர் ஆவர். இவருக்கு ஒரு தாசி இக்கலையைக் கற்றுக் கொடுத்தாள். :ே இச் சங்கீத வித்யாதிகப் பிரிவுக்கு வேற்று நாட்டினின்றும் இசைவல்லு நர்கள் வந்திருந்தனர். கலியாணலிங்கு என்று ஒருவர்; குவாலியரில்'இருந்து வந்தவர்; அவருடன் மூன்றுபேர் வந்திருந்தனர். திர்தார் ஆலி என்றொருவர் வந்திருந்தார்". இந்துஸ்தானி பாடகர் ஒருவர் லகாராம் எனப்பட்டவர் அபராதம் விதிக்கப்பட்டார். பின்னர் மன்னிக்கப்பெற்றுக் கொடுத்த அபராதத் தைத் திரும்பப் பெற்றார்". கடப்பையிலிருந்து ஒரு பாட்டு வித்வான் வந்ததாக ஒரு ஆவணம் கூறுகிறது." மீர் ரஹிமான் என்பவர் இந்துஸ்தானி பாடகர் ஆவர். இவர் தன் குழந்தைக்கு முடியிறக்க நாகூர்க்குப் போய்வர விடுமுறை கேட்டார். இதனால் இசை வல்லுநர்களும் இசையை ஓர் உத்தியோகத் துறையாகக் கருதலாயினர் என்று ஊகித்தறியலாம். வேற்று நாட்டிலிருந்து இசை கற்றுக் கொள்வதற்கும் தஞ்சைக்குப் போந்தனர் எனத் தெரிகிறது. பல்லாரி மாவட்டத்திலிருந்து இருவர் - அப்புராவ் சுப்பராவ், ஆனந்த சுப்பராவ் என்ற பெயரினர்-இசை கற்றுத்தரவேண்டும் என்றும், உணவு அளிக்க வேண்டும் என்றும் விண்ணப்பித்தனர். அவர்கள் பல்லாரி மாவட்டத்தினின்று இங்கு ஏன் வரவேண்டும் என்ற வினாவுக்கு மறுமொழி தருவார் போல் பாட்டுக் களின் தராதரம் அறியலாம் என்று தாம் வந்ததாக அவ்வேண்டுகோளில் கூறினர். ஈசுவர சாஸ்திரி என்றொருவர்" மூக்கினால் புல்லாங்குழல் ஊதுவதில் வல்லுநராய் இருந்தார். பாகவதமேளா பாகவத மேளா என்பது இசை வல்லுநர் யாவரும் நன்கறிந்த இசை நாடகக்குழு ஆகும். கி. பி. 1769லேயே பாகவத மேளா குறிக்கப்பெறுகிறது. கோகுலாஷ்டமிக்கு ருக்மிணி கல்யாணம் நடித்ததாக அவ்வாவணம்கூறுகிறது: பாகவத மேளா கண்காணிப்பு, பாளம்பட்டு யாதவ பட் என்பவர் ஆவர் என்று 1793க்குரிய ஆவணக்குறிப்பால் அறியப்படும்'. பாகவத மேளாவுக்குச் சுரோத்திரியம் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது."அ அம்மேளாவில் விகடகவி களும் இருந்தனர்.' விகடகவி வைத்தியநாத லோகநாதன் என்பவர் புது 132 ச. ம. மோ, த. 6.46, இங்கனம் பயிற்றுவித்த தாசியின் வீட்டுக்கு உஸேன்கான் போனமையின் அவருக்கு அபராதம் 12 தேங்காய்கள் அழைத்துக்கொண்டு போனவனுக்கு அபராதம் 12 :ேங்காய்கள். 133. 1-817. குவாலியர் என்பது மத்தியப் பிரதேசத்திலுள்ளது. இதன் வடக்கு, வடகிழக்கு, வடமேற்கு ஆகிய பகுதிகளில் சம்பல் என்ற ஆறு சூழ்ந்துள்ளது. 134 2-281 135, 1–841 136. 2–46 137, 2.191 138. 4-268 139, 2–244 140, 4-98 141. ச. ம. மோ. க. 18-76 141 அ. ச. ம. மோ. க. 11-9 142. ச. ம. மோ, த, 18-1