பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 "30-4-1822 முகாம் திரெளபதாம்பாபுரம்: தஞ்சை வாத்தியக்காரன் - வெள்ளைக்காரன் - அக்னிஸ்புருஸ் இடம் ஐரிஷ் பைப் என்ற வாத்தியம் - அவனுக்குச் சம்பளம் - ரூ. 45 ' " தற்கு 200 புலிவராகன் צ15 יז " ஃபிடில் (Fiddle-Wiolin) தந்திகளை ராபர்ட் வெள்ளைக்காரனிடம் வாங்கியது " ." பியானோ வாத்தியம் நன்கு செய்யும் மனவேல் நபராயி " என்ற ஆவணக் குறிப்புக்களினின்று சாபத் (?), ஐரிஷ் பைப், ஹார்ப், ஃபிடில், பியானோ முதலிய மேனாட்டு இசைக்கருவிகளை இயக்குபவர் பலரிருந்தனர் என அறியலாம். பியானே வாத்தியம் நன்கு செய்யும் ' என்ற குறிப்பால் பியானோ முதலிய இசைக்கருவிகளைத் தமிழ்நாட்டிலேயே செய்யத் தொடங் கினர் என்பதும் போதரும். வெள்ளையர், செட்டைக்காரர்கள்' எனப்பட்டனர். (சட்டை அணிந் திருப்பவர் ஆதலின் சட்டைக்காரர்கள் எனப்பெற்றனர் போலும்) பியாண்டு வாசிப்பவர்கள் 42 பேர் என்ற ஒரு குறிப்பு இருக்கிறது." இவர்களுள் கிளாரினெட், ஃப்ளுட் (Flute), வேய்ங்குழல், ஃபிரஞ்சு ஹார்ன் (French Horn), த்ரயம்பெட் (Trumpet) முதலியவற்றை இயக்குபவர் பலர் ஆவர். பலவகை இசைக்கருவிகள் ஸாரங்கி' போன்ற வடநாட்டு வாத்தியங்களும் பரவலாகப் பயிலப் பட்டிருந்தன. குப்புசாமி, கோபாலய்யா என்ற இருவரும் சாரங்கியில் வல்லவர் ஆவர்.' அந்நாளில் நாதசுரம், சுருதி, ஜாலர், உடுக்கை, சந்திர சூரிய வாத்தியங் கள், புல்லாங்குழல், தித்தி, காகளம், இந்துஸ்தானி நகாரா, கர்ணா, டக்கா முதலிய இசைக்கருவிகளும் இருந்தன." " கர்ணாவுக்கு மட்டக்குதிரை, டக்காவுக்குக் குதிரை " என்றுள்ளதால் இக்கருவிகளைக் குதிரைமேல் வைத்து இயக்கினர் என்று தோன்றுகிறது. மிருதங்கம், ஸாரங்கி, ஸாபத் முதலியவை தோற்கருவிகள்" என்பது ஓர் ஆவணக் கூற்று. 151, 5–42 152. ச. ம. மோ. த. 5-89 153, 2-265 154. 1-160; ச. ம.மோ. த. 80-8; 5.8 155. 2-162 156. ச. ம. மோ. க. 16.45 157. The Music of India by H. A. Popley, Page 110 & 111 - 158. 1-248 159. 1-184, 185 160, 1-186 161, 1–228, 229