பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 நாட்டியம் ஆடும் பெண்களுக்குச் சில கட்டுப்பாடுகள் உண்டு. அன்னோர் சந்த்ரமா (?), வைர ராக்கடி, பேசரி, அட்டிகை, வெள்ளி மெட்டி, ஆகியவை அணிதல் கூடாது நெற்றியில் குறுக்கே நீளமாகக் குங்குமம் இடக்கூடாது ; சில குறிப்பிட்ட ரவிக்கை புடைவைகளை அணியக்கூடாது ; கையில் உருமால் வைத்துக் கொள்ளக்கூடாது ; வேலைப்பாடு செய்த நாடா அணிதல் கூடாது." அரண்மனையில் நாட்டியம் ஆடும்பொழுது தெய்வத் தின்மேல் பதம் பிடிக்கலாம் ; ராஜேபூரீ மகாராஜ் சாகேப் மேல் பதம் அபிநயம் பிடிக்கலாம்; பிற நர ஸ்துதி கூடாது.' --- நட்டுவனார் சபையில் இருக்குங்கால் துப்பட்டாவோ அல்லது சால்வையோ கழுத்தில் அணியவேண்டும் தலையில் அணியக்கூடாது; காலில் செருப்பு அணியக்கூடாது - என்பன நட்டுவனார்கட்குரிய சில கட்டுப் பாடுகளாம்.' எனினும் இக்கட்டுப்பாடுகள் சுந்தரி என்றவளுக்கும் அவள் வமிசத்தார்க் கும் தளர்த்தப்பட்டிருந்தன. அவளுக்குப் பல அணிகலன்களும் இனாம் அளிக் கப்பெற்றன. கி. பி. 1819இல் அளிக்கப்பெற்ற இச்சலுகை, சுந்தரியினுடைய பாரம்பரியத்துக்கு இல்லை என்று, பிறிதொரு உத்தரவில் நீக்கப்பட்டது.' இச் சுந்தரிக்கு மேலும் சில சலுகைகள் தரப்பட்டன. ராஜேழரீ திவான் சாகேப் அவர்கள் " சிலங்கணம்' போய்வரும்பொழுது அவள் மகாராஜ் சபையில் ஆரத்தி எடுக்கவேண்டும்; அவளுக்கு ஜாம்தார் கானாவிலிருந்து சால்வை, கும்பினி ரூ. 20 தரப்படும்; அவள் நாட்டியம் ஆடினால் அவளுக்கு ரூ. 15 அளிக்கப்பெறும் - இங்ங்ணம் அவட்குச் சில சலுகைகள் தரப்பெற்றன.' மேலும் தெலுங்கு ஆண்டுப் பிறப்பு, நவராத்திரி, தீபாவளி, சங்கராந்தி இப் பண்டிகை நாட்களில் முதல் நாட்டியம் சுந்தரிக்கு உரியது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பெற்றது". 1. அரசாங்க உத்தியோகத்திலிருக்கும் நாட்டியம் வல்லவர் அரசு உத்தர வில்லாமல் வேறு ஊர்களுக்கு நாட்டியம் ஆடுவதற்குப் போகக்கூடாது. அங்ங்னம் சென்றவர் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர்." பெண்களும் அந்நாட்களில் நாடகத்தில் நடித்தனர்." மிருதங்கம் வாசிக்கிற காமாட்சி' என்ற தொடரால் பெண்களும் மிருதங்கம் வாசித்தனர் என்று அறியப்பெறும். நாடகசாலையில் பெண்கள் உணவு அளிக்கப் பெற்றனர். 1825இல் உணவு நிறுத்தப்பெற்றுச் சம்பளம் அளிக்கப்பெற்றது.* 173. 9-2, 8 174. 9-4 175. 9.4: 5. 176. 9-5 177, 9–7, 8 178, 9–9 179. ச. ம. மோ, த, 6-18 18O. 1-249 18.1. 8-201 182. ச. ம. மோ. த. 4-87