பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

235 சங்கீத வித்யாதிகப் பிரிவினர் பெரிய அலுவலர்கள் வீட்டுக்குச் சென்று இசைப்பணி புரிதல் வேண்டும் என்ற ஒரு வழக்கமும் இருந்ததாதல் வேண்டும். இதனை, 1834: ஸங்கீத வித்யாதிக பிரிவுக்குச் சொல்லி லகஷ்மண கோஸாவி அவர்களுடைய மேளவாத்தியங்களுடன் பகல் 2 மணிக்கு மந்திரிவர்ய சதாசிவ கேசவ பண்டிதருடைய வீட்டில் தயாராக இருக்கவேணும்' என்றமையான் அறியலாம். ஆண்களும் நாட்டியக்காரி வேஷம் போட்டுக்கொண்டு இரவில் ஊர்வல மாக வருவதுண்டு. அவ்வாறு வருங்கால் ஒரு சமயம் நாட்டியக்காரி வேஷம் போட்டுக் கொண்டு வந்த பிறிதொரு கூட்டத்துக்கும் மனவேறுபாடு ஏற்பட்டு ஒரு வழக்கு விசாரணை நடந்தது.' இங்ங்னம் பொழுது போக்குக்காக வேஷம் போட்டு நடித்துக்கொண்டு ஊர்வலம் வருதல் அந்நாட்களில் வெகு வாக நடைபெற்றது போலும்! நாடகம் நடத்த முன் அனுமதி தனிப்பட்டவர்கள் நாடகம் நடத்துவதற்கு அரசாங்கத்திடம் முன் அனுமதி பெறவேண்டியிருந்தது. வாணக்காரத் தெருவிலிருக்கும் அய்யாக்கண்ணுப் பிள்ளை என்பவர், குல தெய்வம் செங்கமல நாச்சியம்மனுக்கு விழாவெடுத்துத் தமயந்தி நாடகம் நடத்த அனுமதி வேண்டியுள்ளார். ே சகாநாயக்கன் தெரு வெங்குசாமி என்பவர் கண்டேராவ் சுவாமிக்கு முன் வள்ளியம்மை நாடகம் போட அனுமதி வேண்டினார். * பறைத்தெருவிலிருக்கும் மூவர் இரண்டுநாட்கள் செவத்தரியார் என்னும் நாடகம் போடுவதற்கு அனுமதி கேட்டுள்ளனர். ' கருத்தட்டான்குடி ரோந்து பெருமாள், அனுமாருக்கு அபிஷேகம் செய்து ராமநாடகம் நடத்த அனுமதி வேண்டியுள்ளார். ' சக்வாரம்பாபுரம் சத்திரத்தைச் சேர்ந்த தேப்பெருமாநல்லூர்ப் பெரு மக்கள் வரதராஜசுவாமி பூநீராமநவமி உற்சவத்தில் 9ஆம் திருநாளில் கம்ஸவத நாடகம் சர்க்கார் மண்டகப்படியாக நடத்தவேண்டும் என்று வேண்டினர்." பச்சண்ணா சந்திலிருக்கும் காளியம்மனுக்கு மண்டகப்படி செய்து மார்க்கண்டேய நாடகம் போடுவதற்கு அனுமதி கேட்டுள்ளனர்." 183. 2–220 184, 10-47 முதல் 58 முடிய 185. ச. ம. மோ. த. 10-7 186. ச. ம. மோ. த. 9-88 187, 188. ச. ம. மோ. க. 3-4 189, ச. ம, மோ, த. 5-18 190 ச. ம. மோ. க. 2-42