பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 மாடியின் கீழ் அனுமாரிடம் அரிச்சந்திர நாடகம் நடத்தவும், சாமளா தேவிக்குக் கரகம் உக்ரகாளிக்குப் பூஜைகள் நடத்தி இரவில் இரணிய நாடகமும் நடத்த டபீர்குளம் சாலை 40 வீட்டினர் உத்தரவு வேண்டினர்." தெற்கலங்கத்தில் மளகீ கோபால நாயகர் என்பவர் வேங்கடாசலபதிக் குப் பூசை போட்டுத் தன் வீட்டுக்கு எதிரில் இரணிய நாடகம் நடத்த வேண்டு தல் விடுத்துள்ளார்." இங்ங்ணம் உத்தரவு பெறாவிடில் கொத்தவால், டாணாக்காரர், மத்யஸ்தர் ஆகிய அலுவலர்கள் தடை செய்வர்கள் போலும். இக்காவலர்கள் தடை செய்யாமலிருத்தற்பொருட்டு முன் அனுமதி இன்றியமையாததாயிற்று. சில இசைக் கருவிகள் பெயர் மாற்றம் சில இசைக்கருவிகட்குப் பெயர் மாற்றம் கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது." முன்பேர் மாற்றியமைத்த பேர் தம்பூர் கர்கரி பெரிய தவுல் பிருதுடுண்டுமா சிறு நகாரா லகுடுண்டுமா ஜாங்கடை ஜல்லரி சிங்க சிருங்க துருதுரி உத்தரி இரும்பு முக்கோண வாத்தியம் ஆப: கிங்கிணி வெள்ளைக்கார கிளாரனெட் மஞ்சுளசுவநா துப்பாக்கி மாதிரியிருக்கும் வாத்தியம் காஹாளம் சுத்திக்கொண்டிருக்கும் கொம்பு ஸர்ப காஹாளம்" சலங்கையுள்ள தம்பட்டம் சந்திரிகா புல்லாங்குழல் LITTLDRT இசை நூல்கள் மோடி தமிழாக்கத்துள் குறிக்கப்பெற்றுள்ள சில அரிய இசை நூல்களைப் பற்றிக் கூறுதலும் இங்குப் பொருத்தமாகலாம். முதலாம். துளஜா சங்கீத சாராம்ருதம் என்ற இசைநூலை எழுதினார் என்பது முன்னர்க் கூறப்பட்டது. இது போன்ற பல இசை நூல்கள் மோடி ஆவணக் குறிப்புக்களிற் காணப் பெறுகின்றன. அவற்றுள் சில பின்வருமாறு: 191. ச. ம. மோ. த. 8-81 192. 1-811. 193. ச. ம. மோ. க. 7-12, 18 194. Frontice piece, P, 123 of the Music of India by H. A. Popley,