பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 கல்வி நிலையங்கள் - சரஸ்வதி மகால் முன்னாட்களில் இந்நாள் போல் யாவரும் கல்வி கற்பதற்கு வாய்ப் புக்களும் இல்லை; வாய்ப்புக்கள் இருந்தனவாகக் கொளினும் பயன்படுத்துவார் மிகச் சிலரே யாயினர். சமஸ்கிருதம் கற்றல் வேதியர்கட்குரியதாயிருந்தது; அன்னோர் வேதம் கற்க அக்கிரகாரங்களில் வசதிகள் இருந்தன. தஞ்சை யில் மராட்டியர் ஆட்சி வருவதற்கு முன்னர் நாயக்கர் ஆட்சி நிலவியிருந்தது. அவர்கள் காலத்தில் தெலுங்கு மொழி ஆட்சி மொழியாக இருந்தது. முன்ன தாகவே முஸ்லிம்கள் இந்நாட்டில் வேரூன்றிவிட்டனர். அவர்கள் ஆட்சி செய்த காலத்தில் இந்துஸ்தானி அரபி மொழிகள் வழக்கில் வந்தன. எனவே வடமொழி, தெலுங்கு, இந்துஸ்தானி ஆகிய மொழிகளிடையே தமிழும் வழங்க லாயிற்று. இந்நிலையில் மராட்டிய மொழி பேசும் மராட்டிய மன்னர்கள் தஞ்சையில் ஆட்சி செய்யத் தொடங்கியதும் அன்னோருடைய மொழி அரசாங்க மொழியாயிற்று. ஆகவே மராட்டிய மொழியையும் மக்கள் கற்க வேண்டிய நிலையுண்டாயிற்று. பதினெட்டாம் நூற்ருண்டின் இறுதியிலிருந்து ஆங்கிலேயரின் குறுக்கீடு ஏற்பட்டதால் ஆங்கிலமும் புகுந்தது; எனவே சமஸ்கிருதம், தெலுங்கு, மராட்டி, உருது, ஆங்கிலம் ஆகிய மொழிகளுடன் தமிழ் மொழியும் கலந்து உறவாடித் தமிழ்நாட்டில் வழக்கில் இருந்து கொண்டிருந்தது' என்பது மிகையாகாது. எங்ங்னமாயினும் ஆங்கிலக் கல்வி புகட்டக் கல்விநிலையங்களை ஆங்கிலேயர் தொடங்கி நடத்தியமையின் மேனாட்டுக் கல்விக்கு வழி கோலப்பெற்றது" என்பது மன மகிழ்ச்சிக்கு ஏதுவாகிறது. 1. “Tamil the language of the Tamils was forced to fend for itself” - p. 286, last para, History of Tamil Nad, N. Subramanian 2. “Schwartz introduced English Schools in the Ramnad & Tanjore areas and for the first time in tha late 18th C. the window to the west was thrown open to the Tamils” - p. 286. History of Tamil Nad, N. Subramanian.