பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 இச்சரபோஜிக்குப் பிள்ளைகள் இல்லை. ஆகையால் இவர் இறந்த பிறகு இவர் தம்பி துக்கோஜி அரசர் ஆனார். - துக்கோஜிக்குப் பிறகு அவர் முதல் மகன் இரண்டாம் ஏகோஜி அரசர் ஆனார். இவருக்குப் பாபாசாகேபு என்றும் பெயர். இவர் அரசர் ஆகி ஈராண்டுகளே ஆட்சிபுரிந்தார். இவருக்குப் பிறகு இவர் மனைவி சுஜானாபாயி ஆட்சி செய்தார். அரசர் இறந்ததும் அவரது பட்டத்து அரசி ஆட்சியுரிமை எய்துவதுண்டு என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். உள்நாட்டுக் கலகத்தால் அவரும் இறந்தார். அவருக்குப் பிறகு அரசு கட்டிலில் எய்துவதற் குத் துக்கோஜியால் சேர்த்துக்கொள்ளப்பட்டுக் கத்திக் கல்யாணம் செய்து கொள்ளப்பட்ட மராட்டியப் பெண்ணான அன்னபூர்ணாபாயிட்ம் பிறந்த பிரதாபசிங்கரை அரசன் ஆக்கினர். இதுவும் தம் சாதி ஆசாரத்துக்குத் தகுதியல்ல என்று அந்நாட்களில் அரசகுடும்பத்தினர்களில் பலர் நினைத்தனர் ஆதல்கூடும். இது, " பிரதாபசிங்கரது மகன் இரண்டாம் துளஜா 22 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவர்க்குப் பிறந்த குழந்தைகள் இறந்துபோயினர். அப்பொழுது தம் தந்தைக்கு, விவாஹமாகாத ஸ்திரீயிடம் பிறந்தவர் என்ற குறை ஏற்பட்டு விட்டது. அத்தகைய பேச்சுக்கு இனி இடம் கொடுக்கக்கூடாது ' என்று தீர்மானித்தார் துளஜா அரசர். ஆகவே தம் குலத்திலே, தம் கோத்திரத்தில்" தாயாதிகளுக்குள் ஒருவரைத் தேர்ந்தெடுத்து சுவீகாரம் செய்துகொண்டார் என்பதால் அறியப்பெறும். இதனால் கத்திக்கல்யாணம் செய்துகொண்ட மராட்டியப் பெண் வயிற்றில் பிறந்தவர்களும், வாரிசாக வருதற்கு உரிமையில்லை என்று அந்நாளில் கருதினர் என்பது தெரிகிறது. சுவீகாரமாக வந்த சரபோஜிக்குப் பிறகு இரண்டாம் சிவாஜி 1855இல் இறந்தபொழுது ஆண்வாரிசு இல்லை பெண்கள் இருந்தனர். எனினும் ஆங்கில ஆட்சியாளர்கள் சிவாஜியின் மகளையும் அரசியாக ஏற்றுக்கொள்ள வில்லை; தஞ்சை நகர அளவிலும் மராட்டிய அரசுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டனர். 4, 2 – 284, 235. 5. " There is difference between Lagnam and Katga vivaham. In the former case, the tali is tied by the husband and in the latter case by a sumangali Brahmin woman. A sword will be placed in a chair or some such thing and the marriage ceremony is gone through * - P. 5, Deposition of Rangaswami Madik Row, 8th witness for Defendants 1 & 2 ; O. S. No. 26 of 1912 in the Subordinate Judge's Court, Tanjore. 6. பக்கம் 126, போன்ஸ்லே வம்ச சரித்திரம்.