பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 தஞ்சையில் " சர்வ வித்யாசாலா " என்ற பெயரில் கல்விநிலையம் இருந்ததாதல் வேண்டும். இதற்கு 1807இல் (?) "கவவித்யா கலாநிதி சாலா" என்று பெயர் மாற்றம் செய்யப்பெற்றது. இந்நவவித்யா கலாநிதி சாலா தஞ்சைக்கோட்டையில் இருந்தது."சு இக்கல்விநிலையத்தில் கி. பி. 1785இல் 85பேர் அத்தியயனம் செய்தார்கள்; அதாவது வேதம் கற்றனர் எனவும், ஆறு மொழிப் பள்ளியில் 385 பேர் படித்தனர் எனவும் தெரிகிறது. 1797க்குரிய ஆவணம் நவவித்யா கலாநிதி சாலையில் இருந்த ஆசிரியர்கள் பற்றி விரிவாகக் கூறுகிறது. அது வருமாறு: அ வேதம் சொல்பவர் : 16 பேர் 4 இருக்கு வேதம் , 4 யசுர்வேதம் ; 2 சாம வேதம்; 2 அதர்வண வேதம்; 2 சுக்ல யசுர் வேதம் ; 2 ஆறு சூத்திரம் சிரெளதி. ஆ. சாத்திர பாடம் சொல்பவர் : 20 பேர் 2 தருக்கம்; 2 இலக்கணம்: 2 மீமாம்சை 6 வேதாந்தம் ; 2 துவைதம் : 2 அத்துவைதம் ; 2 விசிட்டாத்துவைதம் ; 2 தருமசாத்திரம். இ. காவியம் முதலியன சொல்பவர் : 4. காவியம் ; 2 நாடகம்; 2 அலங்காரம் ; 2 சோதிடம் ; 2 ஸங்கீதம் , 2 சிற்பம் ; வைத்தியம் - சாத்திரியம், தமிழ், ஆங்கிலேயம், யுனானி. ஈ. எழுத்துக்களைக் கற்பிப்பவர் : 26 பேர் 6 மகாராட்டிரம் ; 2 தெலுங்கு: 2 தமிழ் கிரந்தம்: 6 துலுக்கு, 2. பார்சி ; 2 அரபி: 2 தென்தேசபாஷை 4 ஆங்கிலேயம். உ. கவாத்து 4 : 4 கழிபட்டை (?) 4 குதிரைச்சவாரி. ஊ. குழந்தைகளுக்குப் பாடம் எழுதிவைக்கிறவர்கள் 2 பையன்களை அழைத்துக்கொண்டு வரும் வேலையாட்கள் - 4 நவவித்யா கலாநிதி சாலை உண்டியும் உறையுளும் கொடுத்துக் கல்வி கற்பிக்கும் நிலையமாக இருந்ததாதல் வேண்டும் என்று தெரிகிறது. ஆகையால் அக்கல்விநிலையத் தொடர்புடையவராக, 3. 4-62 3.அ. ச. ம. மோ. த. 25-19 4. ச. ம. மோ. த. 5-40ஏ. 1882க்குரிய தமிழாக்கக் குறிப்பிலும் இங்ங்னமே உள்ளது. ( ச. ம. மோ. த. 4-1 ) இதனுள் கண்ட ஆறுமொழிகள் - தமிழ், தெலுங்கு, மராட்டி, உருது, சமஸ்கிருதம், ஆங்கிலம் என்பன ஆகலாம். - 5. 1-2 முதல் 6