பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

243 மேஸ்தர் ராமனுடைய மாடியிலும் ஒரு பள்ளியிருந்தது தஞ்சாவூர்க் கிடங்கில் காய்ச்சும் சாராயம் யானை குதிரை வகையராவுக்குப் போக, விற்று முதலான தொகை இப்பள்ளிக்கு அளிக்கப்பெற்றது." இதனால் சாராயக்கடை விற்றுமுதல் தொகையிலிருந்தும் கல்வி நிலைய ஆசிரியர்கட்குச் சம்பளம் அளிக்கப்பட்டது என அறியப்பெறும். இதை உறுதி செய்வது போன்று கீழ்க்கண்ட ஆவணக் குறிப்புக் காணப்படுகிறது : " நவ வித்யாகலாநிதி பள்ளிக்கூடம் படிக்கிற பிள்ளைகளுக்குக் காவிய பாடம் சொல்லுகிற சுப்பாசாஸ்திரிக்கு மாதத்திற்கு 15 சக்கரம் சம்பளத்தைச் சாராயப் பேட்டையின் தொகையிலிருந்து கொடுப்பது." --

  • = *

இருந்தது." 1856இல் சிரேயஸ் சத்திரத்தில் இருந்த பள்ளிக்கூடத்தையும், தெற்கு வீதியில் இருந்த பள்ளிக்கூடத்தையும் எடுத்துவிட்டு, மேலவீதியில் ஒரு பள்ளிக் கூடம் தொடங்கப் பெற்றது. அதற்கு ஜேம்ஸ் என்பார் ஆசிரியராக நியமிக்கப் பட்டார்." மங்களவாசம் ' என்பது சிவாஜி II இன் காமக்கிழத்தியரின் மக்கள் வாழ்ந்த கட்டடம் ஆகும். இது தெற்குவீதியில் உள்ளது; அங்கும் ஒரு பாட சாலை இருந்ததாதல் வேண்டும்." தரங்கம்பாடியில், மேஸ்தர் ஜான் பாதிரி நடத்திய ஆங்கிலப்பள்ளி இருந்தது." முக்தாம்பாள் சத்திரத்தில் இருந்த பள்ளியில் 4 வேதங்களும், தர்க்கம், வியாகரணம், மீமாஞ்சை, வேதாந்தம், காவியம், ஆங்கிலம், மராட்டி, பார்ஸி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளும் கற்பிக்கப்பெற்றன; 435 பேர் படித்தார்கள்; இதில் தமிழ் கற்றவர்கள் 193 பேர்.: - கணபதி அக்கிரகாரத்தில் மாணாக்கரிடமிருந்து சம்பளம் பெற்றுச் சொல்லித் தந்த ஆசிரியர் நால்வர் 72 பேருக்குப் பாடம் சொன்னார்கள். ஈச்சங்குடி, கார்குடி, விசித்திரராஜபுரம், சோமேசுவரபுரம் ஆகிய ஊர்களி லும் மாணாக்கரிடமிருந்து சம்பளம் வசூலித்து நடத்திய பள்ளிகள் இருந்தன. 17. ரெஸிடெண்ட் ஆக இருந்தவர் 18. 8-107 ; 7-672, 678 13. 2.86 20. 2-280 21. 8-88; 2-84 22, ச. ம. மோ. ச. 27.82 23. ச. ம. மோ. த. 18-108 24. ச. ம. மோ. த. 25-20 25. ச. ம. மோ. த. 25-21 26, 25-22