பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

245 அக்கல்வி நிலையத்திலே அச்சகமும் இருந்ததாதல் வேண்டும் என்று ஊகித்தறிய இடம் இருக்கிறது." -- நவவித்யா கலாநிதி சாலைக்குச் சொத்துக்கள் இருந்திருத்தல் கூடும். சமுத்திரத்தோட்டம் என்பது இக்கல்விக் கூடத்துக்கு 160 சக்கரம் கொடுத்து விலைக்கு வாங்கப்பெற்றது." சரஸ்வதி பாண்டாரம் - சரஸ்வதி மகால் சரஸ்வதி பாண்டாரத்தின் திம்மதிதார் ராஜேபூரீ ராமையா வராஹப் பையா என்பவுர் ஆவர். இவ்வேலையில் இவர் இரண்டாம் சிவாஜி காலத்தில் இருந்தார். சரஸ்வதி பாண்டாரத்தைப் பற்றிக் கி. பி. 1776க்குரிய குறிப்பொன்று கிடைத்துள்ளது. அதில் சரஸ்வதி பாண்டாரத்தில் புத்தகம் பூசை செய்கிற வனைப் பற்றியுள்ளது. இராமபட்டன் என்றொருவன் ; அவன் தகப்பன் வேலை செய்தபொழுது 6 சக்கரம் அவனுக்கு அளிக்கப்பெற்றது. அவன் இறந்தபின் இராமபட்டன் அவ் வேலைக்கு வந்தான். அவனுக்கு 3 சக்கரம் ஊதியம் ; தன் தகப்பனுக்கு அளித்ததுபோல் 6 சக்கரம் தனக்கும் அளிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான்.'s 1827க்கு உரிய குறிப்பொன்று கிருஷ்ணசாத்திரி என்பவர்க்கு ரூ. 10 சம்பளம் என்று கூறுகிறது." ஆனால் அனுபவமுள்ள கிருஷ்ணாசாரி என்பவருக்கு 1828இல் சம்பளம் ரூ. 3 என்று காணப்படுகிறது." கி. பி. 1849க்குரிய குறிப்பொன்று ' சரஸ்வதி மகாலிலுள்ளவர்கட்கு 11 பஞ்சாங்கங்கள் ' என்றதால் சரசுவதி மகாலில் 11 பேர் வேலையிலிருந் தார்கள் என்று கொள்ள இடமிருக்கிறது. அரசு மறைந்தபிறகு (1858இல்) சரசுவதி மகாலில் மூவர் மட்டும் வேலை செய்தனர் என்று நினைக்க இடம் தருகிறது : பூசை செய்கிறவன் கோபாலய்யா கண்ணய்யா ரூ. 3 காகிதப்புத்தகம் எடுக்கிறவன் சங்கர்பட் ரூ. 3 அச்சுப்புத்தகம் எடுக்கிறவன் குப்பாபட் ரூ. 3' என்றமையால் இவ்வூகம் தோன்றுகிறது. ஒலைச்சுவடிகள் எடுக்கிறவன் இருந்தனனா என்று கேள்வி எழுகிறது. சகம் 1767 அதாவது கி. பி. 1845இல் பனை ஓலைப் புத்தகம் எடுப்பவர் நால்வர் இருந்தனர் என அறியவரு கிறது. அங்ங்னமே காகிதப் புத்தகம் எடுப்பவர் அறுவர் இருந்தனர் எனத் தெரிகிறது; ஆனால் 1875இல் ஒருவரே இருந்தார் என்பது உறுதி."அ 36. 1-238 37. 3-148 38. 2–129 39. 4-428 40. 4-425 41, 12–188 42, 12–182 42.அ. 8-81, 82