பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 நூல் அட்டவணை தொகுத்தவர், ஸாஹஜியின் நாடகங்களைக் குறிப்பிடுங்கால், 'மா. பா. லெகஷ்மிநாராயண நாடகம் - ஸாஹஜிராஜக்ருதம்" என்று குறிப்பு எழுதி, அடுத்துவந்த சில நூல்களுக்குப் பூர்வக' என்று குறித்தார். இதனான் அடுத்துக் குறிக்கப்பெற்ற அந்நூல்களெல்லாம் ஸாஹஜி எழுதியவை என்று கொள்ளக்கிடக்கிறது. ஆனால் இடையில் , ' தை. பா. சர்வாங்க" சுந்தரி விலாஸ் நாடகம் - பூர்வக” " என்று காணப்படுகிறது. இது பற்றி நோக்கியபொழுது சார்வாங்க சுந்தரி நாடகம் கிரி ராஜர் ' என்ற கவிஞர் பாடியது என்று தெரியவந்தது". #. - இங்ங்னம் தவறுபடக்குறிப்புக்கள் எழுதியனவும் சிலவுள. சில சமயங்களில் 9 அல்லது 10 நூல்கள் எல்லாவற்றுக்குமாகச் சேர்த்து ஒரே எண் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. போஜ நிகண்டு, பிரயுக்தபத மஞ்சரி, ஐந்த்ர நிகண்டு, ஸ்லேஷார்த்த பத சங்க்ரஹ நிகண்டு, நாநார்த்த சப்தாதுசாஸன நிகண்டு, த்விருப கோசம், மயூர நிகண்டு, பாஹ்ரிகேய நிகண்டு, த்ரிருப கோசம் - ஆக 9 நூல்களுக்கு 1769 என்ற எண் கொடுக்கப்பட்டுள்ளது. இறுதியில் ஆக பத்ரம் (ஏடுகள்) 106க்குப் பக்கம் 212 என்று ஒரு குறிப்பும் உள்ளது". இங்ங்னமே 1771 எண் கொண்டது 10 நூல்களையுடையதாக உள்ளது. இது பத்திரம் (ஏடுகள்) 105க்குப் பக்கம் 210 உடையது". இது தெலுங்கு ள்.ழுத்தில் உள்ள ஓர் ஒலைச்சுவடி. மேலும் ஒரு சுவடி 103 ஏடுகள் கொண்டது : 206 பக்கங்கள்; இச்சுவடி யில் 19 நிகண்டுகள் உள்ளன என்று தெரிகிறது". மேலே கண்டவண்ணம் குறிப்புக்களுடன் கூடிய நூல் அட்டவணையில் 3000க்கு மேற்பட்ட நூல்கள் குறிப்பிடப்பெற்றுள்ளன". இங்ங்னம் குறிப்புக்களுடன் தொகுக்கப்பெற்ற அட்டவணை மட்டும் அன்றிச் சகம் 1785 (கி. பி. 1863) இல் 'பனையோலைச்சுவடிகளின் ஜாபிதா" என்றொரு அட்டவணை எழுதப்பெற்றுள்ளது". அவற்றுள் சிலவற்றில் ஒவ் வொன்றிலும் பல பிரதிகள் இருந்தமை காணலாம். உதாரணமாக: பிரதமயா கெளமதியில் 17 பிரதிகள்", காசிகா விருத்தியில் 10 பிரதிகள்", அமரமூலம் பிரதம காண்டம் 31 பிரதிகள், இரண்டாவது காண்டம் 32 பிரதிகள், மூன்றாவது 56 12-286 (எண் 2349 ) 57. 12-286 (எண் 2854 ) 58. Catalogue of Telugu Manuscripts, D. 658. 59, 12–278 80, 12.275 61, 12-274 (எண் 1770) 62. 12-801 ( எண் 2992) 63. 2–160 -64, 65. 12-174