பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L! அரசர்கள் பற்றிய செய்திகள் முதலாம் ஏகோஜி பெயர்: தஞ்சை மராட்டிய அரசர்களுள் ஏகோஜி முதல் அரசர் ஆவர் இவர் ஏகராஜ மகாராஜா என்று குறிப்பிடப்பெறுகிறார். மோடி தமிழாக்கச் சுவடிகளில் எங்கணும் வெங்காஜி என்ற பெயர் காணப்பெறவில்லை. 30-12-1676க்கு உரிய படேவியா அருங்காட்சியக வெள்ளிப்பட்டயத்திலும் பிற செப்பேடுகளிலும் ஏகோசி மகாராசா என்றே காணப்பெறுகிறது. சிவாஜி தம் தம்பி வெங்காஜிக்கு எழுதிய கடிதங்கள் இரண்டு கிடைத்துள்ளன. அவற்றுள் முதற்கடிதத்தில் ' யேகோஜி'என்றும், 2.அ இரண்டாவது கடிதத்தில் "வ்யங்கோஜி' என்றும் காணப்பெறுகின்றன. வேற்றுநாட்டவர் குறிப்புக்களில் வ்யங்காஜி ' என்ற பெயர் குறிக்கப்படுகிறது. “The Jesuit Missionary writes in 1676 : Vyankaji sought to make

  1. *

himself beloved by the people............... இதனால் வ்யங்காஜி என்ற பெயராலும் வழங்கப்பட்டமை தெளிவு. 1. 8-105; 7-671, 2. பக்கம் 7, 121, 185, 140, 160, 164 - தஞ்சை மராட்டியர் செப் பேடுகள் - 50, தஞ்சாவூர்த் தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடு (1988) (சொல்லடைவு பக்கம் 286 காண்க) 2.அ. Ekkoii ' என்று பின்வரும் நூலில் காணப்பெறுகிறது, P. 67, Diary and consultation Book, Records of Fort St. George, dated 8th April 1678. 3. சிவாஜி வெங்காஜிக்கு எழுதிய கடிதங்கள் என்ற கட்டுரை (5) காண்க. 4. Page, 228. History of the Mahrathas Vol. I - Sardesai.