பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ջ51 ஆவன : குமார சம்பவ சம்பு, தருக்க சங்கிரகம், தருக்க சாத்திரம், தருக்க சங்கிரக தீபிகை, முக்தி ரத்னாவளி என்பனவாம். 2-2-1872இல் ரகுவம்சம் இரண்டு புத்தகங்கள் அளிக்கப்பெற்றன." சரஸ்வதி மகாலிலிருந்து பல நூல்களை அரசபரம்பரையச் சேர்ந்தவர் களும், பெரிய அலுவலர்களும், அரச மாதேவிகளும் எடுத்துச்சென்று படித்துள் ளார்கள் எனத் தெரியவருகிறது. சரசுவதி மகாலிலிருந்து அமரம், சப்தம், ஸ்மாஸ் சக்ரம் இவை மூன்றும் மாப்பிள்ளையிடிம் கொடுத்துத் திரும்பி வாங்குகிறது ' - இது 1811இல் விடுத்த அரசு ஆணையாகும். " ஜிஜாம்பாபாயி சாயேபு அரண்மனைக்கு ஒரு மாசக் கெடுவுக்கு வைசாக மகத்துவம் וו11יי HI சையம்பாபாயி சாயேபு அரண்மனைக்கு ஒரு மாசக்கெடுவுக்குச் சிராவண மகத்துவம் ' " சூன் மீ" 19 அசூர் கச்சேரி ராமய்யா அவர்களுக்கு அத்துவைத நிர்ணயம், சங்கீத கீதம் FF11. " ஜயந்தி அம்பாபாயி சாயேபு அரண்மனைக்கு ஒரு மாசக்கெடுவுக்கு ராமாயணம் அயோத்தியா காண்டம் டிை வியாக்கியானம்' பூநீகாஞ்சி காமகோடி பீடாதிபதிகளிடத்தில் மராட்டிய மன்னர்கட்கு மிகுந்த மரியாதையுண்டு. கி. பி. 1841இல் பூரீசங்கராசாரியார்க்குத் தருமா மிருத மகோததி என்ற நூல் வேண்டிவந்தது. ஆகவே சங்கராசாரியாரின் அலுவலர் கணபதி சாஸ்திரிகள் அந்நூல் இரண்டு மாதங்களுக்குள் படித்துத் திருப்பிவிடுவதாகக் கூறிப் பெற்றுச் சென்றார்.' எனவே நூல்களைச் சிலருக்குக் கடனாகக் கொடுத்துத் திரும்ப்ப் பெற்றுக்கொள்ளும் பழக்கமும் சரஸ்வதி மகாலில் இருந்து வந்தது என்பது நூல் பட்டியல் தயாரித்ததற்குப் பிறகும், நூல்களை அரசபரம்பரையினர் எடுத்துச் சென்றுள்ளனர் எனத் தெரிகிறது. "78 வருஷம் நவம்பர் மாதம் 30ஆம் தேதி வரை பாக்கி:-" ' மா. காமாகூஜியம்பாபாயி சாயேபு அவர்கள் அரண்மனைக்கு ஒரு மாசக் கெடுவுக்குத் துலாகாவேரி மகத்துவ புஸ்தகம் - 1 ' 107. 8-80 108. 8-81. 109. 2-180 110. 8–87 111, 112, 8–87 113. 8-88 114 ச. ம. மோ, த, 8-88 -