பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

261 இவ்விரண்டாம் துளஜாஜியின் காலத்திலேயே தேசஸ்த கிருஹஸ்தர் களுக்குச் சுரோத்திரியம் கி. பி. 1778இல் வழங்கப்பெற்றதாக வேறொரு குறிப்புள்ளது. அதினின்று சுபா மன்னார்குடி, கச்சனம் தாலுக்கா, சேகல் மகாலில் தரிசு நிலம் 14 அடிக்கோலால் கோனேர் நரசிம்ம என்பவர்க்கு 44; வேலி நிலம் அளிக்கப்பெற்றதாக அறியப்பெறும். மேலும் மன்னார்குடி மேல்முகம் தாலுகா ஜேபால் கிராமம், ஏரனுாரைச் சேர்ந்த வேலியும், கீழ்முகம் சித்தாம்பூர் - ஆலங்குடி 26 வ்ேலி நிலமும் கி. பி. 1779இல் 14 பேருக்குச் சுரோத்திரியம் செய்யப்பெற்றது." - o இங்ங்னம் பெற்ற சுரோத்திரியங்கள், சுரோத்திரியதாரரின் வழித் தோன்றல்களுக்கு உரிமையுடையனவல்ல எனத் தோன்றுகிறது. ஆதிமூர்த்தியின் சுரோத்திரியம் - இவர்களின் பையன் குப்பா புன்செய் 1, வேலி." " அம்பாஜி நாகோஜி - இவர்கள் சுரோத்திரியம் - இவர்கள் பையன் அப்பு - இவர்கள் பேரில் ஆக்கவேண்டும் - நன்செய் வேலி ; புன்செய் வேலி." என்று இரு குறிப்புக்கள் காணப்பெறுகின்றன. ஆதிமூர்த்தி என்பார் 1. வேலி நன்செய் 1, வேலி புன்செய் சுரோத்திரியம் பெற்றார். அங்ங்னமே அப்பாஜிநாகோஜி என்பவரும் நன்செய் வேலியும் புன்செய் ! வேலியும் சுரோத்திரியம் பெற்றார். ஆனால் அச்சுரோத்திரிய நிலம் அன்னோருடைய மக்களுக்கு உரியனவாதற்கு அரசாங்க ஆணைபெறவேண்டும். ஆகவேதான் மேற்கண்டவண்ணம் விண்ணப்பக் குறிப்புக் காணப்பெறுகிறது. இரண்டாம் சரபோஜி காலத்துக்குப் பிறகும் தேசஸ்த கிருகஸ்தர்கள் பலருக்குச் சுரோத்திரியம் வழங்கியமைக்குச் சான்றுகள் உள்ளன. கி. பி. 1833இல் 489 பேருக்கு மன்னார்குடி, பானகநல்லூர், சித்தவளி, மரியூர், சத்தியவாடி, சோளகச்சேரி முதலியவூர்களில் மொத்தம் 884, வேலி அளிக்கப்பெற்றன." கி. பி. 1837இல் 19 ஆண்டுகளாகப் பயிரிடப்பெறாமல் 211, வேலி நிலங்கள் பந்தனைதல்லூர், மணல்மேடு முதலியவூர்களில் இருந்தன. அவை சிவாஜி அப்பா முதலான 36 பேருக்குச் சுரோத்திரியம் ஆக வழங்கப்பெற்றன.' 6. தேசஸ்தர் - மராட்டிய நாட்டினின்று வந்து தமிழ் நாட்டிற் குடியேறிய வேதியர்கள் ; கிருஹஸ்தர் - இல்லறத்தார் 7. 1-187 8, B-179 - 9. ச. ம. மோ, த.20-4 10. ச. ம. மோ, த, 1-18 11. ச. ம, மோ, த. 5-12 ,