பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 சில சுரோத்திரியங்கள் வழிவழி அனுபவிக்குமாறு கொடுக்கப்பெற்றிருத் தலும் தெரியவருகிறது. எடையாத்தங்குடி சுரோத்திரியும்.இதற்குச் சரபோஜி ராஜபுரம் என்று பெயர். இச்சுரோத்திரியம்' சூரிய சந்திராள் உள்ளவரையில்" அனுபவிக்குமாறு கொடுக்கப்பெற்றது. கொடுக்கப்பெற்ற நிலம் 29222: குழி, இது மூன்று பேருக்கு அளிக்கப்பெற்றது. இதில் ஒருவர் சிதம்பர பிள்ளை என்பவர் ஆவர். இவர் வேதியரா என்பது சிந்தித்தற்குரியது. வேறொருவர் சோன ஜி அப்பா என்பவர் ஆவர்.' இந்நிலக்கொடை முதலாம் சரபோஜி காலத்ததாதல் வேண்டும்." - கி. பி. 1805இல் தத்தாஜி அப்பாவுக்குக் கும்பகோணத்தில் 50 வேலி சுரோத்திரியம் கொடுத்துச் சரபோஜிராஜபுரம் என்று பேரிட்டதாக ஒரு குறிப்புக் காணப்பெறுகிறது.' மேலே கண்ட சிதம்பர பிள்ளை, சோனஜி அப்பா, தத்தாஜி அப்பா ஆகியோர் வேதியரல்லர். தத்தாஜி அப்பா என்பவர் இரண்டாம் சரபோஜியின் காலத்தில் பெரிய அரசியல் அலுவலர். அரசாங்க ஊழியம் செய்தவர்கட்கு விடப்பட்ட இனாம். நிலமும் சுரோத்திரியம் என்று கூறப்படுவது உண்டு ; ஆகலின் இவர்கட்கு அளித்தது சுரோத்திரியம் எனப்பட்டது. --- கோயிலுக்கு அனாதி தரிசு நிலத்தைச் சோத்திரியம் செய்து கொடுப் பதும், பெயரளவில் வரி பெறுவதும் வழக்கில் இருந்ததாதல் வேண்டும். - மன்னார்குடியைச் சேர்ந்த சிவகங்கை விசுவநாதசுவாமி கோவில் - இந்த கோயிலுக்குக் கொரடாச்சேரியைச் சேர்ந்த மங்களம் அக்கிர்காரக் கிராமம் - அனாதிதரிசு - வெள்ளக்காடு - பலநாளாகப் பயிரிலியாக இருந்த நிலம் 25; வேலி 21 மா - இதனைப் பாடகசாலைத் தருமமாகச் சுரோத்திரியம் செய்து விசுவநாதபுரம் ' என்று பேரிடப்பெற்றது; கோவில்பேரில் சன்னது செய்து ஆண்டொன்றுக்கு 100 சக்கரம் வரிகொடுக்கவேண்டும் என்று கூறப் பட்டது. இது 1771இல் இரண்டாம் துளஜா செய்த தருமம். கி. பி. 1776க்குரிய குறிப்பொன்றும் இதனையே கூறுகிறது. இதில் நிலப்பரப்பு 35 வேலி 2,மா என்று கூறிப் பின் நிலம் செம்மைப்படுத்தப்பெற்றது என்றும், இங்ங்ணம் செம்மைப் படுத்தப்பெற்றது 14 அடிக்கோலால் 19; வேலி 2; மா என்றும் அதிகப்படியாகக் கூறப் பெற்றுள்ளது. இதன்கண் குறிப்பிடப்பெற்ற பாடகசாலைத் தருமம் என்பது அறிவதற்குரியது. " பாடகம் சொல்லுதல்" என்ற தொடர்க்குப் புராண கதைகளை மனத்திற்படும்படி அபிநயித்துச் 12. 2–252 13. His ( Sarfoji I ) Dharmadhikari Aiyavayya seems to have given to Brahmins agraharams like Mangamadam in Tiruvenkadu & Sarfoji rajapuram in Tirukkadaiyur - p. 231, Maratha-Rule in the Carnatic - C. R. Srinívasan. 14. 2-221 - 15, Tamil Lexicon M. U, 16. ச.ம. ம்ோ, த. 7-9 17. ச.ம. மோ, த, 8–5.