பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.263 சொல்லுதல் என்று பொருள்தரப் பெறுகிறது."அ அங்ங்னமாயின் ப்ாடக்சாணல என்பது புராணகதைகளை மனத்திற்படும்படி அபிநயித்துச் சொல்லுவதற்குரிய பயிற்சியிடம் எனக்கொள்ளலாம். - சத்திரங்களுக்கும் சில கிராமங்கள் கொடுத்தபொழுது சுரோத்திரியமாக வழங்கப்பெற்றன என்று தெரியவருகிறது.

கி. பி. 1783 மாதுபூரீ மோகனாபாயிக்குரியது ராஜாமடம் சத்திரம் , அச்சத்திரத்துக்குப் புதுக்கோட்டை உப்பளம், மகிழங்கோட்டை உப்பளம், தாமரகோட்டை உப்பளம், ராஜாமடம் நாட்டு உப்புக் காளவாய் ஆகியவை சுரோத்திரியம் செய்யப்பெற்றனவாக ஒரு குறிப்பால் அறியப்பெறுகிறது.' ■ == 軒 சுரோத்திரியம் பெற்றவர் தம் வாழ்நாள் முழுவதும் மட்டும் அச்சுரோத் திரியம் அநுபவிக்கலாம் என்றும், அவர் சந்ததியினர்க்கு உரிமை இல்லை யென்றும், அரசர் அனுமதியின்பேரில் ஒரோவழி அவர் சந்ததியினர்க்குச் செல்வதுண்டு என்றும் மேலே கூறப்பட்டன. சுரோத்திரியம் பெற்றவர் அச்சுரோத்திரியங்களை விற்பனை செய்யலாம் என்றும், அங்ங்னம் விற்பதாக இருப்பின் அதனை அரசுக்கே விற்பனை செய்யவேண்டும் என்றும் தோன்று கிறது. கோந்தகை என்ற ஊர்; இதனைச் சுரோத்திரியமாக உடையவர்க்கு அதிகக் கடன் இருந்தது. அக்கடனைத் தீர்க்க ஒரு சுரோத்திரியத்தை விற்றுவிட்டார் போலும் ! கடன் அடைபடவில்லை. ஆகவே கடன்காரர் களிடம் இருந்து விடுபடுவதற்குக் கோந்தகை என்ற பெயருடைய பிறிதொரு சுரோத்திரிய ஊரை அரசர் அருள்கூர்ந்து வாங்கவேண்டும் என்று வேண்டு கோள் விடுத்ததாக ஓர் ஆவணக்குறிப்புள்ளது." இதனால் சுரோத்திரியத்தை ஒரு கட்டுப்பாட்டின்கீழ் நின்று விற்கும் உரிமை சுரோத்தியதாரருக்கு இருத்தல் புலனாகும். - பாகவத மேளாவுக்குச் சுரோத்திரியம் வழங்குவதுண்டு. பூவநேந்துார், குடிகாடு, பருத்திக்கோட்டை, கோரைக்கோட்டை, மேலவயல், சோணம் பேட்டை என்றவூர்கள் பாகவதமேளாவுக்குச் சுரோத்திரியமாக வழங்கப் பெற்றன." ஆ. சர்வமானியம் எந்தவிதமான தீர்வையும் செலுத்தாமல் அனுபவிக்குமாறு கொடுக்கப் படும் நிலக்கொடை சர்வமானியம் எனப்பெறும். சுரோத்திரியம் வேதம் 17.5 Tamil Lexicon M. U. 18. ச. ம, மோ. த. 5-29 19. ச. ம. மோ. த. 21-82 20. ச. ம. மோ.த. 18-11