பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

顯 264 வல்லார்க்கோ அல்லது சிறப்பாக அரசாங்க ஊழியம் செய்தார்க்கோ வழங்கும் நிலக்கொடை ஆகும். இதனின் வேறாயது சர்வமானியம். - ஏகோஜி தாம் அரசர் ஆனதும் கி. பி. 1676இல் நடாத்துார் - இராசகோபால அய்யங்கார் என்பவருக்குக் கும்பகோணம் - கருப்பூர்பீமானூரில் ஒருவேலி நிலம் சர்வமானியம் அளித்தார்." --- ஏகோஜியின் முதல் மகன் ஸாஹஜி என்பவர் ஆவர். இவர் சூரியகிரகண காலத்தில் சங்கமுகியில் (காவிரி கடலோடு கலக்கும் இடத்தில்) யசுர்சாகை, ஆபஸ்தம்ப சூத்திரம், ஹரித கோத்திரம் அப்பாபட் என்பவருக்கு ; வேலி நிலம் சர்வமான்யம் செய்து கொடுத்தார்."அ - முதல் ஏகோஜியின் பேரன் முதல் துளஜாவின் மகன் இரண்டாம் ஏகோஜி ஓரிரண்டாண்டே ஆட்சிபுரிந்தவராதல்கூடும். இவர்க்கு முன் ஏறத்தாழ 70 ஆண்டுகள் தஞ்சையில் மராட்டியர் ஆட்சி நடைபெற்று வரலாயிற்று. காசியில் அன்னசத்திரம் நந்தவனம் ஆகிய தருமங்கள்ை நடத்துவதற்காக ஆண்டுதோறும் காசியிலிருந்த தம்பிரான் அவர்கட்கு 500 சக்கரம் அனுப்பப் பெற்றுவந்ததாதல் வேண்டும். கி. பி. 1737க்குரிய கால கட்டத்தில் காசியில் இருந்தவர் தருபுர மடத்தின் "சிஷ்யர்களில் " ஒருவர்; நாயிக் பண்டாரி" எனப்பெற்றார். அவர் 1787இல், "காசியிலுள்ள அன்ன சத்திரம், நந்தவனம் நடத்தவேண்டிப் பேஸ்ஜி 500 சக்கரம் கொடுத்துக் கொண்டிருந்தார்; ஆனால் காலாகாலத்தில் தொகை வந்து சேர்வதில்லை; ஆகையால் ஒரு கிராமத்தைச் சருவமானியமாய்ச் செய்துகொடுக்கவேண்டும்' என்று கேட்டார். அதற்கு அரசர் மனமுவந்து முன் கொடுத்துவந்த தொகையோடு 500 சக்கரமும் சேர்த்து ஆண்டுதோறும் 1000 சக்கரம் வருமானம் வரக்கூடிய நிலங்களைத் திருப்பனந்தாளுக்கு அருகில் உள்ள குறிச்சி தாலுகா " சோன்பட்" என்னும் ஊரில் நன்செய் புன்செய் நிலங்களைச் சருவமானியம் செய்தார். இச்செய்தி ஓராவணக்குறிப்பினின்று அறியவருகிறது. 21. 8-142 21 அ. ச. ம. மோ. த. 8-29 22. தருமபுரம் ஆதீனத்தில் தம்பிரான்களாக இருப்பவர்களில் ஒருவரே காசிமடத்து அதிபரால் தன் வழித்தோன்றலாக நியமிக்கப்பெறுவது மரபு 23. இக்கால கட்டத்தில் காசியில் குமாரசுவாமி மடத்தில் அதிபராக இருந்தவர்களும் திருப்பனந்தாளில் இந்நாளில் விளங்கும் காசிமடத்தைத் திருப்பனந்தாளில் நிறுவியவர் களுக் ஆன தில்லைநாயக சுவாமிகள் ஆவர். காய்க் பண்டாரி என்பது தில்லை நாயக சுவாமிகளைக் குறிப்பதாகக் கொள்ளலாம், தில்லை சாயக சுவாமிகள் கி. பி. 1720 முதல் கி. பி. 1756 வரை பூரீகாசிமடத்து அதிபராக விளங்கினார்கள் - பக்கம் XVIII. குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத்திரட்டு - ரீகாசிமடம் பதிப்பு, ஜூன் 1952. 24. இங்காளில் உள்ள " பட்டம்" என்றவூர் இதுவாகலாம்.