பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

267 மகாலிங்க ஜடாவல்லபர்” என்றொருவர், தஞ்சையில் இருக்கு வேதம் பயின்று ஜடாவல்லபர் ஆயினார். இவர் தந்தையும் பாட்டனும் ஜடாவில்லபர் களே. இவர் இங்ங்னம் சிறப்புற வேதாத்தியயனம் செய்தமையின் இவர்க்கு 1823இல் இரண்டாம் சரபோஜி மன்னரால் நன்செய் 8 வேலி, புன்செய் 3 வேலி 4 மா 14 அடிக்கோலால் அளந்து கொடுக்கப்பெற்றது." இங்ங்ணம் பல சுரோத்திரியங்களும் சர்வமானியங்களும் வேதியர்கட்கு அளித்தமையாற்றான் இன்றும் தஞ்சைமாவட்டத்தில் பெரிய மிராசுதாரர் களாகப் பல பிராமணர்கள் இருத்தலைக் காணலாம். இ. அக்கிரகாரங்கள் கும்பகோணத்தில் டபீர் அக்கிரகாரம் என்று அக்கிரகாரம் உள்ளது. இது டபீர் பண்டிதர்" என்பவர் பெயரால் அமைக்கப் பெற்றது. இந்த டபீர் பண்டிதர் அக்கிரகாரத்தை அளந்து பைமாஸ்டி"சு செய்வதற்கு அரசாங்க அலுவலர் வந்தனர் என்றும், அதனை "வீடுகட்டும் நிலம்" என்று அவர்கள் குறித்துக்கொண்டார்கள் என்றும், அது சருவமானிய அக்கிரகாரமாகக் கருதப்பெற வேண்டும் என்று அன்னோர் ஆதரவுகளை ஸர்க்காரில் கேட்ட னர் என்றும் ஓராவணக் குறிப்பு உள்ளது." -- 1788இல் பிரதாபசிங்கரின் இறுதிக்காலத்தில் திருவையாற்றில் ஒரு அக்கிரகாரம் அமைக்கப்பெற்றது."சு 1765இல் இரண்டாம் துளஜா அரசர் ஆனதும் கும்பகோணத்தில் புதிய அக்கிரகாரம் கட்டித் தானம் செய்தார்."க இரண்டாம் துளஜாவின் 43. ஜடா வல்லபர் - வேதத்தை ஜடை என்ற முறையில் ஒதுதவில் வல்லவர். ஜடையாவது இரண்டு சொற்கள் மும்முறை திருப்பிச் சொல்லுங்கால் ஒருமுறை அச்சொற்களை gas purpo Gordog. A method of reciting the Veda in which a pair of words is repeated thrice, in one repetition being in inverted order – Tamil Lexicon, M. U. 44. ச. ம. மோ. த. 4-5 45 டபீர் பண்டிதர் என்பார் பிரதாபசிங்கர் (1789 - 1768) காலத்து அமைச்சராக இருந்தவர்; கிலச்சீர்திருத்தங்கள் செய்து அரசாங்கத்தில் சிறப்பிடம் பெற்றார். இவர் பிரதாபசிங்கரின் மகன் இரண்டாம் துளஜா காலத்திலேயும் அமைச்சராக இருந்தார். ஆனால் ஆட்சியிறுதியில் இரண்டாம் துளஜா இச்சிறந்த அமைச்சரைப் பதவி நீக்கம் செய்தார். இச்செயல் அக்காளைய நவாபுக்குச் சினத்தை க் துரண்டியது. ஆதலின் மீண்டும் டபீர் பண்டிதர் அமைச்சராக ஆக்கப்பெற்றார். அவருடைய சர் திருத்தம் டபீர் முறி' என்று சொல்லப்பெற்றது. இதனை அரசர் அவ்வளவாக ஆ. சிக்கவில்லை; அமானி' முறையையே ஆதரித்தார் - Maratha Rule in the Carnatic, p. 251, 314, 364 45.அ. 19ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் ஆங்கிலேயர்களால் செய்யப்பட்ட நில அளவு 45. 1-28, 24 46A, 5-298 46ஆ. 2-9 ".