பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

269 பெற்ற சத்திரங்களின் அட்டவணை 1888, 1855, 1856 ஆகிய ஆண்டுகள் குறிக்கப்பெற்ற சில ஆவணங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. 14-10-1888ஆம் தேதி குறிப்பிட்ட பட்டியலில் கண்ட சத்திரங்களின் பெயர்" பின்வருமாறு: 1. தஞ்சாவூர்க் கோட்டை அன்னசத்திரம் 2. முக்தாம்பாள்புரம் அன்னசத்திரம் 3. ராஜகுமாராம்பாபுரம் அன்னசத்திரம் 4. மோகனாம்பாபுரம் அன்னசத்திரம் 5. சக்வாரம்பாபுரம் அன்னசத்திரம் 6. ராஜஸம்,ாபுரம் அன்னசத்திரம் 7. யமுனாம்பாபுரம் அன்னசத்திரம் 8. சைதம்பாபுரம் அன்னசத்திரம் 9. சுலக்ஷணம்பாபுரம் அன்னசத்திரம் 10. மகாதேவபட்டணம் அன்னசத்திரம் 11. சைதாம்பாபுரம் ராமேசுவரம் பழைய சத்திரம், புது சத்திரம் 12. மல்லியம் அன்னசத்திரம் 13. பஞ்சநத மோகனாம்பாபுரம் அன்னசத்திரம் 14. ராஜகுமாராபாயிஅமணிராஜே அன்னசத்திரம் 15. மாதுபூரீ அஹல்யாபாயி அன்னசத்திரம் 1908இல் வெளியிடப்பெற்ற தஞ்சை-மதுரை மாவட்டங்களிலுள்ள அரசர் சத்திரங்களின் பரிபாலனம்-முன்னும் இப்பொழுதும்" என்ற வெளியீட் டில் வெண்ணாறு, புதுக்கோட்டை காசாங்குளம் சத்திரம், திரெளபதாம்பாள் புரம் சத்திரம், நடார் சத்திரம் ஆகியவை அதிகமாகக் கூறப்பெற்றுள்ளன." இந்நூலில் தஞ்சைக்கோட்டை அன்னசத்திரம் - சிரேயஸ் (sreyas) என்ற பெயரால் குறிக்கப்பட்டுள்ளது. இச் சிரேயஸ் சத்திரம் இரண்டாம் சிவாஜியால் தான் விரும்பி வழிபடும் கடவுள் பெயரால் அமைக்கப்பெற்றது என்று அறிய வருகிறது. கி. பி. 1743 முதல் 1837 வரையுள்ள காலத்தில் மேற்கூறப்பட்ட சத்திரங்கள் தோற்றுவிக்கப் பெற்றன. மேற்கண்ட 14-10-1838க்குரிய குறிப்பில் திரெளபதாம்பாள்புரம் சத்திரம் குறிப்பிடப் பெறாவிடினும் 1855லும்" 1856லும்" எழுதப்பெற்ற பட்டியல்களில் திரெளபதாம்பாள்புரம் சத்திரம் இடம் பெற்றுள்ளது. திரெளபதாம்பாள்புரம் என்பது மணமேற்குடியாகும். திரெளபதி பாயி (திரெளபதாம்பாள்) பிரதாபசிங்கனது மனைவியாவர்." நடார் சத்திரமு அங்ங்னமே 1855இல் குறிக்கப்பெற்றுள்ளது. . 61. ச. ம. மோ. த. 5-18 62. Note on the Past and Present Administration of the Rajah's Chattrams, Tanjore & Madurai Districts, page - 1 53. —do- P. 1. The Sreyas Chattram at Tanjore was founded by the late Rajah Sivaji in honour of his favourite deity 64. ச. ம. மோ. க. 20-81 65. 8-288 66. பக்கம் 82, போன்ஸ்லே வமிச சரித்திரம், தமிழ்ப் பகுதி