பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 இது மிகப்பிற்பட்ட காலத்தில் கி. பி. 1858இல் கூறப்பட்ட போதிலும் செவிவழியாக அறிந்த வரலாற்றுச் செய்தியை இவ்வாவணப்பகுதி நினைவூட்டுகிறது. ஏகோஜியின் பேரன் : கி. பி. 1802 இரண்டாம் சரபோஜியின் காலத்தில் ஏகோஜி ராஜாவின் பேரர் கோவிந்தராவ் காட்கே என்பவர் இருந்தார் என்றும் அவருக்கு (ஓய்வு ஊதியம்) சக்கரம் 25 தரப்பெற்றது என்றும் ஒரு குறிப்பால் அறியப்பெறும். கி. பி. 1798க்குரிய குறிப்பொன்று, கைலாஸ்வாஸி அகோஜி ராஜா அவர்களிடம் உள்ள பெண் மேஹ்ரா குமாராபாய் - 25 ; பேரன் கோவிந்தராவ் காட்கே-15 ' என்று குறிப்பிடு கிறது. பேரனைப் பற்றி மேலே கூறப்பட்டது. பெண் 100 ஆண்டுகட்கு மேல் உயிர்வாழ்ந்தனளா என்பது ஐயத்துக்கு இடம் தருவதாய் உள்ளது. துக்கோஜி இவர் ஏகோஜியின் மூன்றாவது மகன் ஆவர். இவருக்குத் திருமணம் செய்துகொண்ட மனைவியர் ஐவரோடு சேர்த்துக்கொள்ளப்பெற்றவர் அறுவர். இவ்வறுவருள் கத்தி வைத்து விவாகம் செய்துகொண்ட மராட்டியப் பெண், அன்னபூர்ணா என்ற பெயரினர். இவரிடம் பிரதாபசிங்கர் பிறந்தார்; சாமா பாயி என்ற ஒரு பெண்ணும் பிறந்தார்.' கி. பி. 1776க்குரிய குறிப்பில்" இந்தச் சாமாபாய் குறிக்கப்பெறுகிறார். சாமாபாயிக்குத் தி ரு ம ன ம் நடக்கும்பொழுது துக்கோஜிராஜா மன்னார்குடி சுபாவகையரா காடாரம்பை மகாலில் கள்ளப்பாளையம் மாகாணத்தில் சித்தத்தநெல்லூர் நன்செய் புன்செய் ' கொடுத்தார் என்றும், 'நந்தன சம்வத்ஸரம் வரையிலும் " அனுபவித்ததாகவும், பின்னர் ஊர் ஜப்தியில் சேர்க்கப்பட்டுவிட்டது என்றும், ஆண்டுதோறும் 1000 கலம் நெல் குத்தகை என்றும், அதுபோன்று கொடுத்துவரவேண்டும் என்றும் ராமச்சந்திரராவ் காடே கேட்டுக்கொண்டிருக்கிறார். கி. பி. 1779க்குரிய குறிப்பு துக்கோஜியின் மனைவியருள் லக்ஷாம்பாய் என்பவரைக் குறிப்பிடுகிறது. கைலாஸ்வாஸி துக்கோஜிராஜா இவர்களிடத்து பூரீமாதோ லகஷ-ம் பாயிசாஹேப்-இவர்களுக்குச் சரீரம் சரியாக இல்லாதது குறித்து 100 சக்கரம்" 12. 2-168, 169 13. 4-88 14. பக்கம் 81, போன்ஸ்லே வமிச சரித்திரம் (தமிழ்). 15. ச. ம. மோ. த. 18-9 16. ச. ம. மோ, த. 18-82