பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

劃 271 4. மோகனாம்பாள் புரச் சத்திரம் இது இராஜாமடம் சத்திரம் எனப்படும். இச்சத்திரம் 1784இல் நிறுவப பெற்றதாதல் வேண்டும்." மோகனா சாஹேபாவும் இரண்டாம் துளஜாவின் மனைவியருள் ஒருவர்." 5. திரெளபதாம்பாபுரம் அன்னச்த்திரம் திரெளபதாம்பாள், பிரதாபசிங்கரது மனைவியருள் ஒருவர் என்பதும், திரெளபதாம்பாள்புரம் என்பது மணமேற்குடியென்றும் மேலே கூறப்பட்டன. திரெளபதாம்பாள்புரக் சத்திரக் குத்தகை பாக்கிபற்றி ஓராவணக் குறிப்பு உள்ளது." பாயிசாயேப் அவர்கள் காலத்திலிருந்து தென்னந்தோப்பு மாந்தோப்பு முதலியவற்றைப் (பிலவங்க முதல் விரோதிகிருதுவரை) ஐந்து ஆண்டுகள் அதாவது 1793 வரை குத்தகைக்கு வைத்துக்கொண்டிருந்தவர் அலி அவகர் மரக்காயர் என்பவர் ஆவர். குத்தகை பாக்கி 2514 சக்கரம் ஆகிவிட்டது. ஆகவே இதில் 1400 சக்கரம் கொடுத்து மீதியைத் தள்ளிவிட வேண்டும் என்று மரக்காயர் வேண்டிக் கொண்டார். அங்ங்னமே உத்தரவும் ஆயிற்று. இச்சத்திரத்துக்காகக் கீழக்காட்டுர்க் கிராமம் 850 சக்கரங்கள் கொடுத்து 1827 இல் விலைக்கு வாங்கப்பெற்றது."அ 6. யமுனாம்பாள்புரம் சத்திரம் நீடாமங்கலத்துக்கு யமுனாம்பாள்புரம் என்பது மறுபெயர் யமுனாம் பாள் என்பவர் பிரதாயசிங்கரின் மூன்றாவது மனைவியாவர்." இச்சத்திரம் 1761இல் நிறுவப்பெற்றது. இவ்வூரில் கி. பி. 1797இல் காசி விசுவநாத சுவாமி கோயில் மகாமண்டபம் கட்டப் பெற்றது." இங்குள்ள இராமசாமி கோயிலும் சத்திர மேற்பார்வையிலிருந்தது. இச்சத்திரத்திலும் வேதம் கற்பிக்கப்பெற்றதாதல் வேண்டும். யசுர் வேத பாடம் சொல்வதற்கு வெங்கு ஜடாவல்லபர் என்பார்க்கு நாடோறும் படி அரிசி சாமான்களுடன் கொடுக்கப் பெற்றது." சத்திரதருமத்தில் இருந்து உபநயனம், திருமணம் முதலிய வற்றைச் செய்து வைக்கும் பழக்கம் உண்டு."அ ஆகவே 1847இல் முகுந்த 78, 1-194 79. 1-182 80. பக்கம் 109; போன் ஸ்லே வமிச சரித்திரம், தமிழ்ப் பகுதி 81. 4-876, 877, 878 81.அ. 4.199 82. பக்சம் 116; போன் ஸ்லே வமிச சரித்திரம், தமிழ் 83. பக்கம் 285; தஞ்சாவூர் மானுவல் 84. ச. ம. மோ, த 19.22 85. 5-218 86. ச. ம. மோ. த. 9-85 86. Those who apply to the chatram and state their inability to defray their expenses of receiving the Brahmanical thread, of their marriage, of the performance of the ceremonies subsequence to their father's death, receive a sum of money proportionate to the occasion - Extract from the letter of Serfoji II dated 28–1–1801 addressed to the Resident, Page, 26 of Administration of the Rajah’s Chatrams, = -