பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 வைகுண்ட ஏகாதசி, விநாயக சதுர்த்தி, துளசி பூசைவி ஆகியவை. ஆண்டுதோறும் நடைபெற்று வந்தனவாதல் வேண்டும். இத் தஞ்சாவூர்க் கோட்டை அன்னசத்திரம் ராஜகுமாராம்பா பாயி அமணிராஜே சாகேபுக்கு உரியதாக இருந்தது.' இச்சத்திரத்துக்குரிய ஊர் அன்னம்பேட்டை என்பது. இதன் வருவாய் கி. பி. 1843இல் மிகக்குறைந்து விட்டதாகவும் அதற்காக மாதம் 4 கலம் நெல் சம்பளம் கொடுத்து ஒருவரை நியமித்தால் அவர் பராமரிப்பில் வருவாய் மிகலாம் என்றும் கூறப்பட்டது. அதற்கு ஸர்க்கேல் அவர்கள் அந்த ஊரிலுள்ள பெரிய மிராசுதார ரிடத்திலேயே குத்தகை பேசி ஒப்படைக்கலாம் என்று கருதினார். எனினும் சேனாதுரந்தரர் வராஹப்பையா அவர்கள் அந்த அலுவலர் 150 கலம் அதிகம் வருவாய் வருமாறு செய்தால் ஓராண்டுக்கு நியமிக்கலாம் என்று உத்தரவிட்டார்.128 - - சகம் 1767 (கி. பி. 1845)இல் சேனாதுரந்தரர் ராஜேழரீ ராமையா வராஹப்பையா." ராஜ்யத்தில்" (அரண்மனையில்) வேலை செய்பவர்களின் பெயர்களை 48 தலைப்புக்களில் பிரித்துக் கொடுத்துள்ள நிரலில், "மாதோரு காமாட்சியம்பா சத்திரம், மாதோபூரீ பத்மா சத்திரம், மாதோபூரீ அஹில்யாபாயி சத்திரம்' என்று சில சத்திரங்களும், ராஜ குமாரம்பா பாயி சத்திரமும் குறிக்கப்பெற்றன. மேற்குறித்த மூவர் எவ்வெச் சத்திரங்களுக்கு உரியவர் ஆயினர் என்பது தெரியவில்லை. இவர்களுள் காமாட்சியம்பா சிவாஜியின் மூன்றாவது மனைவி; பத்மா (பத்மாம்பா) இரண்டாவது மனைவி, பத்மா சிவாஜிக்கு முன்னரே காலமானார்."அ தஞ்சாவூர்க் கோட்டை அன்னசத்திரத்தில் கி. பி. 1854இல் வைகாசி மாதம் 26 ஆம் நாளில் எத்தனைப் பேருக்கு உணவு அளித்தனர் என்ற விவரம் தெரியவருகிறது. முதல் _ பந்தியில் 240பேர்; இரண்டாவது 70, மூன்றாவது 50; நான்காவது 33; ஆக 373 பேர்; ரீவேஷ்டமம் 20: பைராகி உலுப்பை 38; ஆக 451 பேர் ஆவர்." இதற்கு முன்நாளில் 469 பேர்.க. நாடோறும் கொடுக்கப்பெற்ற உணவு விவரமும் அதில் தரப்பெற்றுள்ளது. 14. சைதம்பாபுரம் அன்னசத்திரம் இது சூரக்கோட்டை அன்னசத்திரத்துக்கு அருகில் இருந்த சத்திரம். இதுவும் சூரக்கோட்டை அன்னசத்திரமும் ஒருங்கு சேர்க்கப்பட்டதெனத் 119. 12–111 120. 12-118 +. . - - - 121. 12–118 122. 12-117, 128 123. 12-117 முதல் 119 வரை 124. 12-135, 186 124.». Tanjore Manual, Part V. Para, 66 425, 12–859 126, 12–860 f =