பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 யாருக்கு உணவு அளிக்கவேண்டும்; எவ்வளவு சேமித்தல் வேண்டும் முதலிய வற்றைப் பற்றிக் கூறியுள்ளார். அதன் சுருக்கம் பின்வருமாறு: சத்திரங்கள் இன்றியமையாத செவவைத் தவிர அதிகச் செலவைக் குறைக்க வேண்டும். சத்திரத்தின் வரவு குறைந்தாலோ, பஞ்சம் வந்தாலோ, பழுது பார்க்க வேண்டி வந்தாலோ, சத்திரத்துக்குக் கடன் ஏற்படும் அதனால் தருமம் குறையும். ஆகவே வருவாயுட் கால் பங்கு ஆயினும் சேமிக்க வேண்டும். கால் பங்கு சேமிக்க முடியாத சத்திரங்களில் அதிகாரிகள் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும்; ஒரு சிறு தொகையாவது மிச்சப்படுத்த முயலவேண்டும். கதியில்லாதவர், பரதேசி, சக்தியற்றவர், வழிப்போக்கர், குருடர், முடவர், குழந்தை, கிழவர் இத்தகையோர்க்கே உணவளிக்கவேண்டும். வழிப்போக்கரில் நோய்வாய்ப்பட்டவர்க்குச் சத்திரத்தின் வயித்தியரைக் கொண்டு சிகிச்சை செய்தல் வேண்டும்; அவர்கள் நோய் நீங்கி நலம் பெறும்வரையில் பத்தியம் வகையரா கவனிக்கப்பெற்றுவரும்." பெரிய அலுவலர்கள் யாராயினும் வந்தால் அவரவர்களுடைய பெருமைக்கேற்ப உணவு மரியாதை செய்யலாம். சத்திரத்தில் உள்ள அலுவலர்கள் ஆட்கள் யாரும் சத்திரத்தில் உணவு கொள்ளக்கூடாது. ஊரிலுள்ளவர்களில் கதியற்றவர்கட்கு உணவளிக்கலாம். ஆனால் ஊரிலுள்ள சோம்பேறிகளுக்கு உதவுதல் கூடாது. - இத்தகைய கட்டுப்பாடுகளின்கீழ் எல்லாச் சத்திரங்களும் இயங்கி வந்தன வாதல் கூடும். 1811ஆம் ஆண்டு " ரெவின்யூ போர்டு " 7ஆவது " ரெகுலேஷன் "படி சத்திரங்கள் பிற அறங்கள் இவற்றுக்கு விடப்பட்ட நிலங்களைப் பற்றிய செய்திகளை விசாரணை செய்யும் அதிகாரம் மாவட்டக் கலெக்டருக்கு உரிய தாயிற்று." இச்சத்திரங்களில் உலுப்பைகள் அளிப்பதுண்டு. சத்திரத்துக்கு வரவியலாதவர்கட்கும், பெரிய அதிகாரிகட்கும், வந்து உண்பதற்கு விரும்பாத 137, "Travellers who fall sick at the Chatram or before their arrival, receive medicine and the diet proper for them.* and are attended to with respect and kindness till their recovery” - page 26 - Past & Present Administration of the Rajah's Chatrams - Extract from the letter of Serfoji || dated 28–1–1801 addressed to the Resident 138, 5-258, 259