பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

279 வர்கட்கும், அரிசியும் அதற்குரிய பிற பொருள்களும் அளிப்பது வழக்கமாய் இருந்தது. இங்ங்னம் உலுப்பைகள் பெரும்பாலும் அந்தணர்கட்கும், பெரியோர் கட்கும், பைராகிகட்கும்,கை வெள்ளையர்களாகிய பெரிய அலுவலர்கட்குமே தரப்படும் என்று அறியவருகிறது. திருவழுந்துார் பெருமாள் ஐயங்கார் - பெருமாள் மூர்த்தி செய்கிறவர்இவருக்குத் தஞ்சாவூர் அன்னசத்திரத்தில் நாளும் 3 உலுப்பை கொடுக்கிறது" ஞானாநந்தநாதர் என்பவர் பிகூைடி வாங்கி வருபவர் : கோட்டைக்கு வந்ததிலிருந்து பிகூைடிக்குப் போகமுடியவில்லை; ஆகவே அவருடன் இருக்கும் ஐந்து பேருக்குமாக இரண்டு உலுப்பைகள் கொடுக்க உத்தரவு செய்ய Gsusdsr@lb "141 அன்னசத்திரம் - தஞ்சாவூர் ............ 38 உலுப்பை எண்ணிக்கைபைராகி'11" H கர்னல்துரை ஈஸ்டென்ட் தஞ்சாவூரிலிருந்து சென்னைக்குப்போகிறார்: கும்பகோணத்தில் இறங்கியபொழுது உலுப்பைகள் தட்டுகள் முதலியன ' - என்பனவற்றால் உலுப்பை அளிக்கப்பெற்றவர் யார் யார் என்பது பெறப்படும். பாபாசாமி புத்திரர் ராமசுவாமி குத்தாலத்திலிருந்து வருகிறார். அவருக்கு ......... விடுதி செய்து கொடுத்து உலுப்பைகள் முதல்தரம் 25, இரண்டாம் தரம் 25 கொடுப்பது " " முதல்தரமான உலுப்பைக்குச் சம்பா பச்சை ہیinh "145 என்ற குறிப்புக்களால் உலுப்பைகளிலேயும தரங்கள் உண்டு &T&T அறியப்பெறும். உ. பலவகை அறங்கள் 1. யாகசாலைத் தருமம் : 1828இல் இரண்டாம் சரபோஜி, வெங்கட ராயர் என்கிற ரெட்டியாருக்குக் காவிரிக்குத் தென்கரையில் 133 குழி நிலத்தை யாகசாலைத் தருமமாய் நீர்வார்த்துக் கொடுத்தார்." i. 139. " Those who do not choose to eat the boiled rice receive it unboiled with spices etc.” – Page 26 Past & Present Administration of the Rajah’s Chatrams, 139.அ. பைராகிகள் - வடகாட்டுத் துறவிகள். 140. 2–188 141. 1-385, 886, 887 142, 12-859 143. 2–9, 10 144. ச. ம. மோ. த. 4-10 145. 2-4 146, 2.258, 254 (பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, கொற்கை கிழாள் நற்கொற்றன் என்பவனுக்கு அவன் வேள்வி செய்த இடம் இருந்த ஊரையே வேள்வி குடி என்று பெயரிட்டுத் தானம் செய்தமை நெடுஞ்சடையன் பராந்தகனுடைய வேள்விகுடி செப்பேடுகளால் அறியப்பெறுகிறது. இச்செய்தி இங்குக் கருதத் தக்கது - பாண்டியர் செப்பேடுகள் பத்து, பக்கம் 89 - 40)