பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 2. தசதானங்கள் : பிராமணர்களுக்கு விசேட காலங்களில் பசு, பூமி, எள், பொன், நெய், ஆடை, வெல்லம், நெல், வெள்ளி, உப்பு என்ற இவை பத்தும் கொடுக்கப்பெறும். இவை "தசதானங்கள்" எனப்பெறும்." இவற்றுடன் மேலும் சிலவற்றைச் சேர்த்துச் 'சோடச மகாதானம்' என்பர் (சோடசம்-16). - 1. அ. கோதானம்: பசுக்களைத் தானம் செய்வது பெரும்பான்மை வழக்கு பசுவைத் தானம் செய்வதற்கு மாறாகப் பணம் தருவதும் உண்டு; ஒரு கோதானத்துக்கு 20 சக்கரம் என்றும், அரைக்கோதானத்துக்கு 10 சக்கரம் என்றும் ஒரு குறிப்பில் கீாணப்பெறுகிறது." உண்மையான பசுவைத் தானம் செய்வதற்கு மாறயூகக் கொடுக்கும் தொகையில் பாதித் தொகை அரைக் கோதானத்துக்கு வழங்கப்பெறும். கி. பி. 1797இல் ராமாயண பட்டாபிஷேகம்; அவ்விழாநாளில் மராட்டிய மன்னர் அலங்கார கோதானம் செய்தார்.'அ இவ்வலங்கார கோதானத்தில் பசு எவ்வாறு அழகுபடுத்தப் பெறும் என்பது விளங்கவில்லை. " திருப்பயணத்தில் கே ஆபத்சகாயேசுவரசுவாமி கோயிலில் மாதத்திற்கு ஒரு கோதானம் கொடுப்பது வழக்கம்" என்றதால் மாதந்தோறும் சில கோயில்களில் பசு தானமாகக் கொடுக்கப்பெற்றது என்பது தெரியவரும். ராமநவமி போன்ற பண்டிகை நாட்களில் கோதானம் செய்யப்பெறும்.அே ஆயிரம் பசுக்களைத் தானம் செய்வது "கோ ஸஹஸ்ரம்" எனப்படும். பாண்டியர்களுள் கி. பி. 710இல் அரசு எய்திய அரிகேசரி பராங்குச மாறவர்மன் என்பவர் ' எண்ணிறந்த கோசகசிர " தானம் செய்தார் என்பது செப்பேடு களாலும் கல்வெட்டுக்களாலும் அறியப்பெறுவது." கி. பி. 1819இல் மராட்டிய மன்னர் கோ சகசிரம் முதலிய தானங்கட்கு ஒரு பெருந்தொகை ரூ. 51,139 செலவு செய்ததாகத் தெரிகிறது." கி. பி. 1832லும் பாத்தியூர்த் தமிழ்ச் சாத்திரிக்கு 1000 பசுக்கள் தானமாக அளிக்கப்பெற்றன.' ஆ. பலவகைகளில் பொன் தானம் செய்வதுண்டு. இரண்டாம் சரபோஜி 1826இல் பெரிய கோயில் சுவாமிக்குத் தங்க விருஷப தானம் செய்தார்.' இங்ங்னமே தங்க யானை வாகனமும் செய்து (பெரிய கோயிலுக்குத்) தரப்பெற்றது.' இவ் யானை வாகனம் தானம் செய்தபொழுது சுவாமி நான்கு தெருக்களிலும் வர ரூ. 200 செலவாயிற்று என்றும், அது போல் விருஷப 147. ச. ம. மோ, க. 6 - 7 148 அ. 10-172, 177; ச. ம. மோ.த. 19-80 148* திருப்பழனம் - திருவையாற்றுக்கு அருகிலுள்ளது. 149. 1-840 149.அ. 1-258 150. வேள்விக்குடி செப்பேடுகள் - பாண்டியர் செப்பேடுகள் பத்து - பக்கம்-40 151, 5-295; ச, ம. மோ. த. 5-86 152. ச. ம. மோ. த. 10-15 153. 4-252 ச. ம. மோ, த. 5.86 154 ச. ம. யோ, த. 5-86