பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

281 வாகனம் நான்கு வீதிகளிலும் வலம் வருங்கால் அந்த அளவு செலவு செய்யலாம் என்றும் ஒரு ஆவணக்குறிப்பு இருப்பதால், தங்க யானை வாகனம் கொடுத்த பிறகே விருஷப வாகனம் கொடுக்கப்பெற்றது என அறியலாம்." மேலும் 1832இல் வெள்ளி விருஷப தானம் செய்ததாக ஒர் ஆவணம் குறிப்பிடுகிறது." | (இ) சோடச மகாதானங்களில் கன்யாதானம் என்பது ஒன்று. ஒரு பெண் பூப்படைவதற்கு முன்னே பொன்னும் மணியும் பூட்டி ஒருவனுக்குத் திருமணம் செய்விப்பது கன்யாதானம் என்பர். கன்யாதானம் செய்வித்தன்மைக்கு 1826க்குரிய ஒரு ஆவணக்குறிப்பு உள்ளது. அப்பொழுது ஒரு நாட்டியம் நடைபெற்றது; அதற்கு 27 சக்கரம் 5 பணம் செலவு." 3. துலாபார தானம் : துலாபாரதானமாவது துலாவின் ஒரு தட்டில் தான் அமர்ந்து, பிறிதொரு தட்டில் தன் எடைக்குரிய பொன்னும் மணியும் இட்டுப் பின்னர் அதனைக் கோயில்கட்கும் அந்தணர்கட்கும் அறிஞர் கட்கும் கொடுப்பது ஆகும். இராமேசுவரத்தில் (இரண்டாம் சரபோஜி) வெள்ளியையிட்டுத் துல்ாபார தானம் செய்தார். அந்தச் சமயத்தில் ஸர்க்கேலவர்கள் துணிமணிகளையும், ஐந்துவித உலோகங்களையும் இட்டுத் துலாபாரதானம் செய்தார்." 4. அன்னதானம் : மக்களின் பசியைப் போக்குவது சிறந்த அறம். சங்க காலத்தில் சிறுகுடி கிழான் பண்ணன் என்பவன் இடையறாது சோறிட் டமையின் பசிப்பிணி மருத்துவன் எனப் பெற்றான் என்று புறம் 173ஆம் பாடல் கூறும். ஏழைகட்கும் பயணிகட்கும் உணவிடும்பொருட்டே மராட்டிய மன்னர் பல சத்திரங்களை அமைத்தனர். அவற்றுடன் சில சிறப்பான நாட்களில் லக்ஷம் பிராமணர்கட்கும் உணவளித்தல் பேரறமாகக் கருதினர். அங்ங்ணம் 100 ஆயிரம் பிராமணர்கட்கு விருந்தளித்தமைக்குச் சில சான்றுகள் உள்ளன. 155. 4-480; ச. ம. மோ. த. 5-86 156. ச. ம. மோ. த. 10-15 156அ. ச. ம. மோ. த. 5-84 157. கி. பி. 640இல் பட்டம் ஏறிய அரிகேசரி மாறவர்மன் என்னும் பாண்டிய மன்னன் இரணிய கருப்ப கானமும் துலாபார தானமும் பற்பல செய்தான் என்றும், அவன் வழியில் தோன்றியவனும், மான்தேர் மாறன் எனப்படுபவனும், கி. பி. 710இல் அரசு எய்தியவனுமான அரிகேசரி பராங்குச மாறவர்மன் எண்ணிறந்தன கோசகசிரமும் இரணிய கருப்பமும் துலாபாரமும் மண் னின் மிசைப் பல செய்தான் 'என்றும் வேள்விக் குடி செப்பேடுகள் பகர்கின்றன. முதலாம் இராசராச சோழனும் திருவிசலூரில் துலாபாரம் புகுந்தமை அவ்வூரிலுள்ள சிற்பத்தாலும் கல்வெட்டாலும் அறியப்பெறும் : பாண்டியர் வரலாறு - சதாசிவ பண்டாரத்தார் பக்கம் 41, 46, 195, 196 (1969ஆம் ஆண்டுப் பதிப்பு ) 158. 7–621 36