பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

283 காட்டிலும் எள்ளைத் தானம் பெற்றவர்க்கு அதிக தகூடிணை கொடுக்கப் பெற்றமை தெளிவு. 7. சாளக்கிராம தானம் : திருமால் உருவாகக் கருதிப் பூசிப்பதற்கு உரியதும் கண்டகி நதியில் கிடைப்பதும் ஆகிய சிலை சாளக்கிராமம் எனப் பெறும். கண்டகி நதியானது நேபாளத்தில் தோன்றிக் காசிக்கருகில் கங்கையிற் கலக்கும் ஓராறு என்று கருதப்படுவது." இச்சாளக்கிராம தானம் செய்ததாக மூன்று குறிப்புக்கள் கிடைத்துள்ளன." இவற்றுள் ஒன்று கி. பி. 1781ஆம் ஆண்டில் இரண்டாம் துளஜா சாளக்கிராமமும் வராகமூர்த்தியும் தானம் செய்ததைக் கூறுகிறது." இத்தானம் ஏகாதசி நாளில் செய்யப்பெறும் என்பதை மேலே காட்டிய மூன்று குறிப்புக்களினின்றும், 1846க்குரிய குறிப்பில் 1 ஏகாதசி சாலிக்கிராம தானம் ' என்றமையானும் தெள்ளிதின் அறியப் (CLupulb.193 8. சாயாதானம் : சாயாதானமாவது நெய் அல்லது நல்லெண்ணெயில் தன் முகத்தின் நிழலைப் பார்த்து இதனொடு சிறிது தக்ஷணை இட்டுத் தான மாகக் கொடுப்பது. இத்தானம் பல இடங்களில் குறிக்கப் பெற்றுள்ளது." 9. பிறர் செய்த தருமங்கட்கு உதவி செய்தல்: மராட்டிய மன்னர் தாம் தருமங்கள் செய்வதோடு பிறர் தர்மம் செய்தாலும் அதனை மதித்து அத்தர்மம் நன்கு செயல்பட வேண்டியவற்றைத் தாமும் அளிப்பதுண்டு. நாகையில் சிதம்பரச் செட்டி என்று ஒருவர் இருந்தார். அவர் வாஞ்சூரில் மண்டபம், குளம், அக்கிரகாரம், 12 வீடுகள், கோயில் ஆகியவற்றை 1801இல் உண்டாக்கினார். இரண்டாம் சரபோஜி ( அவற்றைப் பராமரித்தற்காக) ஆண்டொன்றுக்குத் தஞ்சாவூர்ச் சக்கரம் 100 அளித்தார்." 10. இனாம் செலவுகள் : பெரிய அலுவலர்கள் வீட்டுக் கல்யாணம் முதலியவற்றுக்கு அளித்தலும், கவர்னர்கள், ராணுவ தளபதிகள் முதலிய ஆங்கிலேயர்களுக்குக் கிறிஸ்துமஸ் முதலிய பண்டிகை நாட்களில் பணம் ஆடை அணிகலன்கள் முதலாயவற்றைப் பரிசில்களாக அளித்தலும், யாகம் முதலாய காரியங்கள் நடத்த அந்தணர்கட்கு அளித்தலும் முதலாய நன்கொடைச் செலவுகள் பெரும்பான்மையாகக் காண்ப்படுகின்றன. கி. பி. 1765இல் சுபேதார் ரகுநாத் அண்ணாஜி அவருடைய பிள்ளையின் கல்யாணத்துக்கு ரூ. 1000" ' 165, Tamil Lexicon, M. U. 166. ச. ம. மோ, த. 19-11, 2-82; 8.4 167. ச. ம. மோ. க. 8-4 168. 10–171, 178, 176 169. 10-171, 178, 175, 176. பார்கள் ஆதர்ஸ் ஹிந்தி சப்தகோஸ் - 1980 (இந்தத் தானம் கிரிகடினதானம் என்று சொல்லவும் பெறும் என்டர் அன்பர் திரு. ப. வெ. நாகராசன்) ஸய்யாதானம் என்பது இதனின் வேருனது, 170, 4-866 171. 2–13