பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 களை ஆய்ந்து நோக்கின் உண்மை புலப்படும் என்றும் கட்டுரையாளர் எழுதியுள்ளார்." 'சென்னைப் பட்டணத்திலிருந்து வந்த டாக்டருக்கு ஹாஜாருக்குக் கண் வைத்தியம் செய்ததற்கு இனாம் ரூ. 4000 ' என்றுள்ளமையால் இதனை அவருடைய சம்பளமாகச் கருதுவதற்கில்லை. அவர் வைத்தியம் செய்தமைக்குத் தரப்பெற்ற மொத்த மதிப்பு ஊதியம் (Remuneration — Honorarium) sT sir (3 p Glasmrsirersorb. * = கி. பி. 1829இல் டாக்டர் பெல் என்று ஒருவர் குறிப்பிடப் பெறுகிறார். இந்த டாக்டர், மாாேஜி மோஹிதே அவர்களின் நோயைக் குணப்படுத்தினார்; ரூ. 2000 இவருக்கு வழங்கப்பெற்றது.* 1848, 1849இல் டாக்டர் ஸாமுவேல் புருகிங் என்பவரும், 1854இல் வில்லியம் ரெளஸ் என்பவரும் இருந்தனர். டாக்டர் ரெளஸ்-க்கு ரூ. 620 சம்பளம் ஆதல் கூடும்." ஸாமுவேல் புருகிங்" என்பார் 1841 முதல் 1855 வரை அரண்மனையில் இருந்தவர் ஆவர். இவர் இரண்டாம் சிவாஜிக்கு எழுதிய கடிதங்கள் இரண்டு கிடைத்துள்ளன. ஒன்று கும்பகோணத்தினின்று 20-7-1848இல் எழுதப் பெற்றது; பிறிதொன்று தஞ்சாவூரினின்று 28-5-1849இல் எழுதப் பெற்றது. முதல் மடலில் தன்னை நாகப்பட்டினத்துக்குச் செல்ல அனுமதி அளித்தமைக்கு நன்றி செலுத்தியதோடு தஞ்சையில் சிவாஜி ஏற்படுத்திய மருத்துவச்சாலையைக் குறிப்பிட்டிருக்கிறார்." இரண்டாவது மடலில் கோட்டையில் ஒரு வண்டிக்காரனால் தனக்கு நேர்ந்த அவமதிப்புப்பற்றிக் குறிப்பிட்டதோடு, அவமதித்தவர் ஒரு ஆசிரியரின் மகன் ராசி என்று பெயர் என்றும், விசாரணை நடத்தினாலும் தனக்குத் தீங்கு நேரிட்டிருக்குமென்றும், இனிக்கோட்டைக்குத் தான் வராமல் இருக்க இசைவு தர வேண்டும் என்றும், விசாரணை செய்தால் தனக்கு அடிவிழும் என்றும், அது தன் பெருமைக்கு இழுக்கு ஆகும் என்றும் எழுதியுள்ளார்." ஆரோக்கிய சாலை இரண்டாம் சிவாஜி தன் காலத்தில் ஒரு மருத்துவ சாலையை ஏற்படுத்திய செய்தியைப் புரூகிங் குறிப்பிட்டமை மேலே கூறப்பட்டது. இச்செய்தி, 26. Glimpses into our Modi Raj Records – Dhanvantari Mahal, by Ganapathi Rao, Page iii: ” Further scrutiny of papers may probably clarify whether this amount was the annual remuneraticn or the total amount paid to the doctor for the entire period of service" 27. ச. ம. மோ. த, 9-16 28. 4-249 29. 1-164 30. Danvanthari Mahal-by S. Ganapathi Rao, P. iii 31. ச. ம. மோ. த. 4-29 32. ச.ம.மோ.த. 22-14 33. ச.ம.மோ.க. 21-18, 19