பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ջ0 எடுத்து அவற்றுக்கு நகல் எடுத்து மீண்டும் அவற்றை வைத்துவிட்டனர் என்ற கூற்றினின்று சுஜான்பாயி ஆட்சிபுரிந்தமை அறியப்பெறும்ஃஅ நா நாசாகேப் - அப்பூசாகேப் - நாநாசாகேப் o துக்கோஜிக்கு நாயுடு சாதியில் சேர்த்துக்கொண்ட ஐந்து பெண்க ளிடத்து மாலோஜிராஜா, அரிச்சந்திரராஜா என்ற அண்ணாசாகேப். நாநாசாகேப் என்ற மூன்று ஆண்மக்கள் பிறந்தனர்". இம்மூவரும்'துக்கோஜி உயிர்வாழ்ந்த காலத்திலேயே இறந்துவிட்டனர்". இந்த நாநாசாகேபுக்கு அப்பூசாகேப் என்றொரு மகன் பிறந்திருந்தார். இவ்வப்பூசாகேபுக்குப் ' பலஜேவார் ஜாதியிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட ஸ்திரீயினிடத்தில் நாநாசாகேப் என்றொரு மகன் பிறந்தார் ”.* போன்ஸ்லே வம்ச சரித்திரத்தைக் கூறுவதும் தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ளதும் ஆன மராத்தியக் கல்வெட்டு இரண்டாம் சரபோஜி காலத்தில் 1803ஆம் ஆண்டில் வெட்டி முடிக்கப்பெற்றது. அக்கல்வெட்டில் இந்த நாநாசாதேப் சுகமாக வசித்து வருகிறார் என்று நிகழ்வில் கூறப் பெற்றுள்ளமையால் அக்கல்வெட்டுக் கொடுத்த காலத்தில் நாநாசாகேட் உயிருடன் இருந்தார் என்பது போதரும்". இந்த நாநாசாகேபு சென்னைக் கவர்னர் கெளன்ஸிலுக்குப் பின்வருமாறு கடிதம்' எழுதியுள்ளார் : எங்களுக்கு வேறு வாசற்படிவைத்துச் சுவர் எழுப்பிச் சரபோஜி மகாராஜா ஜனங்கள் நமது பக்கம் வராமல், எங்களுக்கு ஒருவித அபாயமும் வராமல் பாதுகாப்புக்கு உங்கள் பாரா ஒன்று நியமிக்க வேணும். நாங்கள் வெளியே சுவாமிதரிசனத்துக்குப் போகும்போதும் வரும்போதும் தகுந்த பந்தோபஸ்துகள் செய்துகொண்டு வரவேண்டும். நாங்கள் ஏகோஜியின் வமிசத்தார்...... சரபோஜி மகாராஜா அவர்கள் எங்கள் பிள்ளைகளுக்கு அநியாய போதனை செய்து மித்திரபேதம் செய்து வருகிறார்..... சரபோஜி மகாராஜா எங்களுக்குச் சத்ரு. ஆகையால் எந்த நேரத்தில் எங்களுக்கு அபாயம் வருமோ என்று அவருக்கு உட்பட்டு நடந்துவருகிறோம்". 22 அ 2-280, 281 23. பக்கம் 81, போன்ஸ்லே வம்ச சரித்திரம் 24. பக்கம் 82, போன் ஸ்லே வம்ச சரித்திரம் : - ” Anna Saheb and Nana Saheb predeceased their father ’’ — p. 242, Maratha Rule in the Carnatic — Srinivasan, C. K. 25. பக்கம் 82, போன் ஸ்லே வம்ச சரித்திரம் 26. பக்கம் 82, 118, போன் ஸ்லே வம்ச சரித்திரம் 27. ச. ம. மோ, த, 6–33