பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 1858; தன்வந்தரி மகால்; செள காமாட்சியம்பா பாயி சாஹேப் அவர்களுக்கு ஸ்நானத்திற்குத் தைலம் தயார் செய்வதற்கு வில்வவேர் சேர் 15; நன்னாரி சேர் 3...... 11 என்ற குறிப்பாலும்,' "1859. தன்வந்தரி மகால்: லாயத்தில் ஆறுமுகம் என்பவனுக்குக் காயம் ஏற்பட்டதினால் பட்டிக் கட்டுவதற்கு மருந்து - வைத்தியர் தேவாஜி கோவிந்த ராவின் ஜாபிதா' - என்ற குறிப்பாலும்" அறியலாம். இந்த மருத்துவக் குறிப்பில் ( Recipe ) வைத்தியர் பெயர் கொடுக்கப் பட்டுள்ளது. இங்ங்னமே பலவற்றுள்ளும் குறிப்பிட்டிருத்தல் கூடும். குறிப்பு எழுதியவர் கையொப்பம் இடுவது போல் இது அமைந்துள்ளது. மேலும் அந்த மருந்தினுல் ஏதாவது குறைபாடு ஏற்படின் மருத்துவக்குறிப்புக் கொடுத்தவர்களுடன் தொடர்பு கொள்வதற்காக இது பயன்படும்." தன்வத்தரி மகால் சம்பளம் மட்டும் 1858ஆம் வருஷம் பன்னிரண்டு மாதங்களுக்கு ரூ. 2262-2-1 கொடுக்கப்பெற்றது எனக் குறிப்பு இருப்பதால்: அங்குப் பல வைத்தியர்கள் இருந்தமை புலப்படும். மேலே காட்டிய மருத்துவக் குறிப்புக்களை வைத்துக் கொண்டு தமிழ்ப் புலவர்கள் தமிழில் எளிய பாடல்களை எழுதிக்கொடுத்தனர். அவை சரபேந்திரர் வைத்திய முறைகள் எனப்பெறும். - வைத்தியக் குறிப்புக்களைக் கொண்டு வைத்திய நூல்கள் எழுதியவர் " 1827 : திருவேங்கடம் பிள்ளை ஸாஹித்யம் செய்து கொடுத்த வைத்திய விஷயம், கர்ப்பிணியின் சிகிச்சை, பாடல் சுமார் 150க்கு சக். 4; ” என்ற குறிப்பாலும்,' " 1827 : ஸரஸ்வதிமகால் - தமிழ் எழுத்து - தமிழ் மொழியில் வைத்திய விஷயம் சாகித்தியம் செய்து கொடுத்ததற்காகத் திருவேங்கடம் ஏடுகள் சுமார் 145, சக். 3; می 37. 4-455 38, 4–458, 4.54 39. “In many of the recipes we find the name of the doctor who prescribed it. Probably it was meant to get in contact with the doctor in case of any complication as a result of the prescription or as a faithful record of the activity of the Dhanvantari Mahal- Page iii, Dhanvantari ... Mahal by S. Ganapathi Rao - 40. ச. ம. மோ. க. 8-6 41. 4-218 42. 4-217