பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

291 என்ற குறிப்பாலும், திருவேங்கடம் பிள்ளை என்பார் கர்ப்பிணி சிகிச்சை பற்றியும் பிற மருத்துவச் செய்திகள் பற்றியும் தமிழ்ப் பாடல்கள் எழுதினார்கில் என்று அறியப்பெறும். திருவேங்கடம் பிள்ளை மட்டுமன்றி வேலாயுத வாத்தியார், கொட்டை யூர்ச் சிவக்கொழுந்து தேசிகர், வெங்கடாசலம் பிள்ளை, சுப்பராயக் கவிராயர் ஆகியோரும் பாடல்கள் பாடினர் என்றறியப்பெறும். திருவேங்கடம் பிள்ளையைத் திருவேங்கடத்தா பிள்ளை என்றும் கூறுவர். so " திருவேங்கடத்தா பிள்ளை பாடல் 200க்கு 1 ; 287க்கு 1 " என்ற குறிப்பினால் இவர் இயற்றியவை இரண்டு சுவடிகளில் இருந்தன என்றறியப்பெறும்." " வேலாயுத வாத்தியார் சரபேந்திர பாடல் 379க்கு 1 ; பாடல் 297க்கு 1 ; 77க்கு 1; 210க்கு 1 ; 503க்கு 1 " என்ற குறிப்பினால் இவர் இயற்றியவை ஐந்து சுவடிகளில் இருந்தனவாதல் கூடும்.' மேலும், வேல வாத்தியார் பாடல் 705க்கு 1; பாடல் 52க்கு 1 ; 56க்கு 1; 314க்கு 1” என்ற குறிப்பில் வேல வாத்தியார் என்று ஒருவர் குறிப்பிடப் பெறுகிறார். இவரும் வேலாயுத வாத்தியார் என்பவரும் ஒருவரேயாவர் என்னலாம். 42அ, சரஸ்வதி மகால் தமிழ் நூல்களின் விளக்க அட்டவணை பாகம் III தொடர் எண் 82 : கர்ப்பிணி பால ரோக சிகிச்சை என்ற நூல் எழுதியவர் திருவேங்கடத்தா பிள்ளை என்றுளது, செ. 454 ; தொடர் எண் 88 - வாத ரோக சிகிச்சையை இயற்றியவரும் இவரே, செ. 288, 43. 12–220 44, 12.220 சரஸ்வதி மகால் சுவடிகளின் விளக்க அட்டவணை பகுதி III இல், தொடர் எண் 75 : சரபேந்திர நயன ரோக வைத்தியம், 879 செய்யுட்கள் : தொடர் எண் 76: சரபேந்திர குன்ம ரோக வைத்தியமுறைகள் ; தொடர் எண் 77 சரபேந்திர நீரிழிவு முதலிய நோய்களுக்கு வைத்திய முறைகள், செ. 77 ; தொடர் எண் 78: சரபேந்திரர் சரப்பான் முதலிய ரோகங்களுக்கு வைத்திய முறைகள் : தொடர் எண் 79 : சரபேந்திரர் வைத்திய முறைகள் 568 செ; தொடர் எண் 87 : சரபேந்திரர் விஷ வைத்தியம் செ, 505 : தொடர் எண் 89 : சிரோ ரோக சிகிச்சை செ. 401 ; தொடர் எண் 90 சரபேந்திரர் வைத்திய விரேசன முறை அதிசார சிகிச்சை, செ. 705 ; தொடர் எண் 91. சரஆேந்திரர். வைத்தியம், காச ரோக சிகிச்சை செ. 452 :