பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

301 கன்றுக்குட்டிக்கு வெக்கைநோய் வராமலிருத்தற்காகப் பன்றி நெய் தடவுதலும் உண்டு என்று ஒரு குறிப்பினால் தெரியவருகிறது." பசுமாட்டுக்கு இளவே குணல் என்னும் வலி வந்தமைக்கு மருந்து ஒரு குறிப்பிலும்," வகவே என்னும் வலி வந்ததற்கு உள்ளுக்குக் கொடுக்க வெந்தயம் படி 4, நல்லெண்ணெய் 1 சேர் என்று ஒரு குறிப்பிலும்" கூறப் பட்டுள்ளன. அனல் வகே என்ற வலிக்கு மருந்து வேறு ஒரு குறிப்பில் உள்ளது." நகரசுத்திமகாலில் ஒரு மாட்டுக்குக் கழுத்துவீங்கியிருப்பதற்கு ஒத்தடம் கொடுக்கக் கைலி உப்பு படியும், மாட்டுக்குச் சிரங்கு வந்ததற்குத் தடவ வேப்பெண்ணையும் குறிக்கப்பட்டுள்ளன." -- குதிரை வைத்தியம் ஒரு குதிரைக்குப் பேகம்பை காண்ட்டே என்னும் நோய்க்கு மருந்து உருண்டைகள் செய்து உள்ளுக்குக் கொடுக்கப் பின்வரும் மருந்துப்பொருள்கள் கூறப்பட்டுள்ளன' காசிக்கட்டி, மிஸ்ரீ, அபின், இரஸ் சிந்துாரம், அதிவிடையம், பூலாங் கிழங்கு, அகல்கரா, காயம் ஆகியவை ஒவ்வொன்றிலும் 9 டாங்க் வீதமும், நஹசரமாஹன் சேர் 10, டாங்க் 9; கோரோசனம், குங்குமப்பூ ஆகியவை ஒவ்வொன்றிலும் 2 டாங்க் வீதமும், இஞ்சி 2 சேர்; நல்லவெல்லம் சேர் ; அவல் படி ; எலுமிச்சம் பழம் 10 - ஆகியவையாம். இதன் கண்ணும் மருந்து செய்யும் முறை சொல்லப்படவில்லை. தேவ ராம்பிரஸாத் என்ற குதிரைக்கு உடல் வலிமை வருவதற்கு 40 நாட்களுக்கு நாடோறும் கைலி மாவு அரிசி படி 1; நெய் சேர்; இராயபுரீ சர்க்கரை சேர் கொடுக்கவேண்டும் என்று ஒரு மருந்துக் குறிப்பு உள்ளது.” ' குதிரை ரத்தமாகச் சிறுநீர் கழிப்பதால் உள்ளுக்குக் கொடுக்க 14 நாட்களுக்கு, சுக்கு 1 சேர்; டாங்கணகார் 1 சேர்; குக்கில் 1 சேர்; குளாச 2 சேர்; அபின் 3 சேர் " என்றி குறிப்பு உள்ளது. இது 1814இல் கொடுக்கப்பெற்ற மருத்துவக் குறிப்பு. ' மாடுகள் குதிரைகள் பறவைகள் - லகூடிணங்களும் வைத்தியமும்' என்பது சரஸ்வதி மகால் வெளியீடு-11 (1979). இதில் பக்கம் 156இல் 74ஆவது தலைப்பு இரத்தமாகச் சிறுநீர் இறங்கினால் தருவதற்குரிய மருந்து தரப்பெற்றுள்ளது : 66. 1-274 : 1-291இல் வேறு சில மருத்துவப் பொருள்களும் கூறப்பெற்றுள்ளன. 6 1-282 68. 1-285 69, 5.488 70. 1-245 71 - 2 - 181 72. 5–220 73, 5–804