பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

303 கைத் என்னும் குதிரைக்குப் பத்துப்போடப் பாலைப்பட்டை 1; பெரிது பாதி 1: கோழிமுட்டை 25 ; சன்ன லவங்கம்பட்டை சேர் : ; உப்பு படி 1: , உளுந்து படி' என்ற ஒரு மருத்துவக் குறிப்பும்" உள்ளது. இவ்விரண்டும் வேறுபட்டுள்ளமை கருதத்தக்கது. அவ்வவற்றின் நோய்க்கு ஏற்ற பத்துப் போடுதலுக்கு" உரிய மருந்துப் பொருள்களைத் தந்தனர். ஆதல் கூடும். யானை வைத்தியம் யானைக்குட்டி இளைப்புத்திர மருந்து, சளியிருப்பதால் தண்ணீர் கொஞ்சமாகக் குடிப்பதற்கு மருந்து வாயுவினால் "ஜயாஹார பாத" என்னும் நோய்க்கு உள்ளுக்குக் காரம், யானைக்குட்டிக்குக் கன்னமும் கடைவாயும் விங்கியது தீர மருந்து, ஸரஸ்வதி பிரஸாத் என்ற யானைக் குட்டிக்கு மாதகி என்ற நோய் போக்க மருந்து." காமாட்சி என்னும் யானைக்குட்டி வாயுவினால் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாகக் குடிப்பதால் உள்ளுக்குக் குக்குவாத கவளம் என்ற மருந்து, பவானி பிரஸாத் என்னும் யானைக்குட்டி முன் இடதுகால் வாயுவினால் பிடிக்கப்பட்டதற்குத் தடவு வதற்கு மருந்து, திருவையாறு கோயில் யானைக்குட்டிக்குக் கண்ணிலிருந்து நீர் பெருகுவதற்கு மருந்து - யானை பலவீனமாய் இருப்பதால் கீரையில் கலந்து கொடுக்க மருந்து - இரணம் மாறிய பிறகு பட்டிக்கட்டின இடம் கொண்டுள்ள விக்கம் தீர மருந்து, நடுவிரலில் நகங்கள் பெயர்ந்துபோய்ச் சிரங்கு ஆனதற்கு மருந்து, காமாட்சியென்ற யானைக்குட்டி நீர் அதிகம் போவதால் உள்ளுக்கு மருந்து, கன்னியாகுமரி என்ற யானைக்குட்டிக்கு வாயுவினால் வயிறு புடைத்து இருப்பதால் உள்ளுக்கு மருந்து," யானைக்கு ஜாஹர் பந்த் (என்ற நோய்) வந்து மிகவும் இளைத்தமையால் உள்ளுக்குக் கொடுக்க ( 8 கோதும்பை ரொட்டி, 4 சேர் ந. எண்ணெய், 4 சேர் வெல்லம் )" இங்ங்ணம் பலநோய்களுக்குரிய மருத்துவக் குறிப்புக்கள் உள. விட்டலப்பிரஸாத் என்னும் யானைக்குட்டிக்கு மதம் பிடித்தமையால் மதம் நீங்கத் தலையில் சேர் நெய்யும் சேர் சிந்துாரமும் தடவியதாக ஒரு குறிப்புக் கூறுகிறது." யானைக்கு நல்ல பசியுண்டாக வேண்டும் எனின் நாடோறும் 10 சேர் வெல்லம் 100கரும்பு ஒரு மாதம் கொடுக்கவேண்டும் என்பது ஒரு குறிப்பு." 79. 2-189 80. பத்துப்போடுதல் - பற்றுப்போடுதல் - மருந்து தடவுதல். 81. 4-474 82, 1-238 83. 2–185 B4. 1-327 85. 1-296 86. 5–485, 486 87. 4-108, 104, 105 88. 4-107. 108 89. 4-101, 102 90. 1–286, 287 91. 1-298, 294 92. 5–309 93. 5-282