பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 யானைக்குத் திணி" யானைக்கு 12 மாதங்களிலும் தென்னை மட்டை, பனை மட்டை, அரச மரக் கிளைகள், ஆல மரக் கிளைகள், கரும்பு, மூங்கில் தழை தாழம்பூ மரத்தின் கட்டை, பாந்தரி இலை, வைக்கோல், கோரை, ஜம்பு ஆகிய வற்றைக் கொடுக்கலாம். பனை மட்டை, கபம் பித்தம் போக்கும். அரச மரக் கிளைகள், வாந்தி தடுக்கும் மதம், பித்தம் ஆகியவற்றைத் தடுக்கும். * ஆலமரக்கிளைகள், வாதம், மேதை, மதம், பித்தம் ஆகியவற்றை நீக்கும். கரும்பு, வாதம், மேதை, மதம், பித்தம், கபம் ஆகியவற்றைப் போக்குவ தோடு, மல மூத்திரம் கட்டுப்படுத்தும். - இங்ங்னம் யானைத் தீனியால் ஆய பயன்கள் கூறப்பட்டிருப்பதோடு, புரட்டாசி மாதத்தில் கோரை ஜம்பங்கோரை போடுதல் வேண்டும் என்றும், கார்த்திகை முதல் தை முடியச் சோளக்களி, நேரியட்டி என்று சொல்லப்படும் கோரை தருதல் வேண்டும் என்றும், இன்னோரன்ன கூறப்பட்டுள்ளன. யானைக்குத் தீனி கொடுக்கும்பொழுது அலுவலர்கள் யானைக்கு அருகில் இருக்க வேண்டும் என்று ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது." மோதிராஜ், ஸிரதாராஜ், விட்டலபிரஸாத், மாணிக்கராஜ்-இந் நான்கும் இரண்டாம் சரபோஜியிடமிருந்த அரச யானைகள். அவைகளில் மோதிராஜ் விரதாராஜ் ஆகிய இரண்டும் சிதம்பரம் வரையில் வரமுடியாத நிலையில் உள்ளன என்று கேள்விப்பட்டதும், சரபோஜி அவைகளின் பாதுகாப்புச் சரியாக இல்லை என்று கருதி, மேற்குறித்த 4 யானைகட்கும் " தீபா அரிசி மாவினால் ரொட்டி செய்து நெய்யைத் தடவி, ரொட்டி திருட்டுப்போகாமல் யானை வயிற்றில் விழும்படி செய்கிறது" என்று 15-2-1822இல் எழுதியுள் sT厅汗." இதனால் யானை குதிரை முதலியவற்றைக் கண்ணுங்கருத்துமாக மராட்டிய மன்னர்கள் பாதுகாத்து இருந்தனர் என்பது நன்கு புலப்படும். ஒட்டக வைத்தியம் சூட்டினால் ரத்தமாகப் போவதால் அதற்கு மருந்து" , பெண் ஒட்டகம் நலம் இன்றி இருப்பதால் மசாலை' ; சிரங்கு தீர்வதற்குத் தைலம்"; ஒட்டகத்துக்கு நீர்கொண்டதனால் சுரம் வந்து தீனி தின்னாததால் உள்ளுக்குக் கொடுக்க மசாலை" - முதலியன பற்றிய குறிப்புக்கள் உண்டு. 94. 12-47, 48 95. 5-50 96, 5-45 97. 5-312 98. 4-857, 858 99. 4-864' 365 100. 1-180, 181