பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 சக்திரோதய மாத்திரையும், சுவர்ண மாலே வசந்த மாத்திரையும் கொடுக்குமாறு தந்வந்தரி மகாலுக்கு ஆணை விடுக்கப்பட்டது." . ஆரோக்கிய மசாலா என்றொரு மருந்து - இதனைச் செய்வதில் பாபு வைத்தியர் என்றொருவர் சிறப்புற்று இருந்தார். அவ்வைத்தியரிடம் ஆரோக்கிய மசாலா செய்வதற்குப் பிற்கண்ட மருந்துப் பொருள்கள் தரப் பெற்றன: சுக்கு, கண்டதிப்பிலி, மரமஞ்சள், கர்ச்சூர், சன்ன லவங்கப் பட்டை, நாககேசரம் - இவற்றுள் வகைக்கு 9 டாங்க் , மிளகு 13; டாங்க், பெருஞ்சீரகம் 14 டாங்க், முதல்தரமான எண்ணெய் 3 சேர். இது ஒரு தைலமாக இருக்கக்கூடும். இலகு சந்தனா:தி தைலம், மகா சந்தனாதி தைலம் ஆகியவை செய்வதற்குரிய மருந்துப் பொருள்களின் விவரங்கள் தெரியவருகின்றன.' சத்திரங்களில் வைத்தியம் முக்தாம்பாள் சத்திரம் போன்ற பெரிய சத்திரங்களில் வைத்தியர்கள் இருந்தனர். அங்குப் படிக்கும் மாணவர்கள் நோயுறின் மருந்து அளித்தனர்; சத்திரத்துக்கு வரும் பயணிகள் நோய்வாய்ப்படின் அவர்களுக்கு மருந்து அளிக்கப்பெறும். நோயாளிகட்குத் தகுந்த உணவும் அளிக்கப்பெறும்.' கி. பி. 1829இல் முக்தாம்பாள் சத்திரத்தில் வைத்தியம் செய்பவராய் இருந்தவர் கஸ்தூரிரங்கம் பிள்ளை என்பவர் ஆவர்.' கண் வைத்தியர் முதலியவர் கண் வைத்தியம், குழந்தை வைத்தியம் ஆகியவற்றுக்கும் வைத்தியர்கள் இருந்தனர். இரண்டாம் சரபோஜி காலத்துக் கண்ணுக்குப் போடவேண்டிய மருந்துகள் பற்றி ஒரு சுவடியில் குறிக்கப்பெற்றுள்ளது.' கண் வைத்தியம் செய்தவர் கி. பி. 1775இல் மீராகான் என்ற பெயருடை யவர் என்று தெரிகிறது.' 109. 1–272 110. 1-177, 178 111. 2-178 முதல் 177 முடிய 112. “Travellers who fall sick at the Chatram or before their arrival receive medicine and the diet proper for them and are attended to with kindness and respect till their recovery -- Page 26, Past and Present Administration of the Rajah’s Chatrams — Extract from the letter of Serfoji II dated 28–1–1801 addressed to the Resident 113. 4-251 114 சரஸ்வதி மகால் நூல்கிலையம் கையெழுத்துப்பிரதி (copied volume) wror, 818 115. 2-149