பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

307 அவுஷதக் கொட்டடி மருந்துகள் எல்லாம் வைக்கப்பட்டிருந்த அறை அவுஷதக் கொட்டடி எனப்பெற்றது. பல்வேறு விதமான மாத்திரைகள், லேகியங்கள், கற்கம், மசாலா முதலிய மருந்துகள் இவ்வறையில் வைக்கப்பட்டு யார் யார்க்குக் கொடுக்குமாறு ஆணை வருகிறதோ அன்னோர்க்கு அம்மருந்துகள் முதலியன அளிக்கப்பெற்றன. இது தன்வந்தரி மகாலின் ஒரு பகுதியாதல் கூடும். " அவுஷதக் கொட்டடி முத்துசாமியிடத்தில் சுவர்ண மாலிகா வசந்த மாத்திரை ஒன்று; அசுவ கெந்தாதி லேகியம் ஒரு சேரும் வாங்கிச் சவாரி ஆன தினம் சாயங்காலத்தில் நான் அக்காவிடத்தில் கொண்டுபோய்க் கொடுத்து அவர்களும் வெங்கோஜி பண்டிதர் இடத்தில் சேரப்பண்ணி னார்கள் ' - என்ற ஆவணப் பகுதியினால்" அவுஷதக் கொட்டிடி' என்பது மருந்துகள் உள்ள பகுதி என்பது உறுதிப்படும். மன்னரின் வைத்தியர் இரண்டாம் சரபோஜி காசிக்குச் சென்றபொழுது ஆங்கிலேய வைத்தியரும் உடன் சென்றார் என்பது அறிந்ததே. அம் மன்னரிடம் அப்பாசாமி என்ற வைத்தியரும் உடன் இருந்தனராதல் வேண்டும். " ஹ-ஜாரின் வைத்தியர் அப்பாசாமியின் மூலம் ராமதேவர் இயற்றிய வைத்திய சாத்திரம் கரீதி செய்ததற்கு 15 பணம் " என்ற குறிப்பினால் அப்பாசாமி என்பவர் அரசாங்க வைத்தியருள் ஒருவர் ஆதல்கூடும் என்றும், வைத்திய நூல்கள் விலைக்கு வாங்கப்பெற்றன என்றும் அறியப்பெறும். 116. 7-880 117. 1-124, 125