பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O அரண்மனையில் நிகழ்த்திய விரதங்களும் பண்டிகைகளும் நாக பஞ்சமி விரதம் இந்தியா முழுவதும் பாம்பை வணங்குவது பரவலாக இருந்து வந்துள்ளது. உயிருள்ள பாம்பையும் வணங்குவதுண்டு. பாம்புப் புற்றுக்குச் சென்று புற்றுக்கு வழிபாடு செய்து புற்றில் பால் வார்ப்பது வழக்கம். இவ்விரதம் சிராவணம் அதாவது ஆவணி மாதத்தில் மறைமதிக்குப் பிறகு 5ஆவது நாளில் வருவது ஆகும். உயிருள்ள பாம்புகளைப் பாம்பாட்டிகள் கொணர்வர். அத்தகைய உயிருடைய பாம்புகட்குப் பூசை செய்து பால் நிவேதனம் வைப்பதுமுண்டு. மராட்டிய மன்னரது மாதரார் நாகபஞ்சமி விரதத்தை மேற்கொண்டு உயிருள்ள பாம்புகளைக் கொணரச் செய்து வழிபட்டனர் என்று சில ஆவணக் குறிப்புக்களால் அறியப்பெறும். உயிருள்ள பாம்பு ஒன்றுக்கு 2 பணம் வீதம் விலை கொடுத்தனர் என்றும் பின்வரும் சான்றுகளால் தெரியவருகிறது : 1779 : கமாவிசி வேலாயுத முதலி : இவர்களிடத்தில் நாகபஞ்சமி பூசையை முன்னிட்டு நாக ஸர்ப்பம் பிடித்து வந்த வகையில் 34க்கு 1க்கு 2 பணம் வீதம் நாகப் பாம்புக்காரனுக்குக் கொடுத்தது 6, சக்கரம் ': 1. " On the Panchami day real serpents are brought and Pooja made to them and milk offered " - P. 275, Deposition of D. W. 30 - Jagannatha Bhutgoswami, O. S. No. 26 of 1912 --- 2. ச. ம. மோ. க. 13-5