பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

309 " 1821 : நாக பஞ்சமியை முன்னிட்டுப் பூஜைக்கு 9 பாம்புகளைப் பிடித்துக் கொடுத்ததற்கு 1 சக். 8 பணம், ஒரு பாம்புக்கு 2 பணம் வீதம்." இந்நாளிலும் உயிருள்ள பாம்புகள் வழிபடப்பெறுதல் உண்டு என்பது ஈண்டு நினைவுகூர்தல் தகும். ஆகவே தஞ்சை அரண்மனையில் அந்நாளில் உயிருள்ள பாம்புகளைக் கொணரச் செய்து நாக பஞ்சமி நாளில் வழிபட்டனர் ஆதல் கூடும். முன்னாட்களில் அங்ங்னம் உயிருள்ள பாம்புகளைக் கொணரச் செய்து வழிபட்டமைக்கு மேனாட்டறிஞர் கூற்றும் சான்று பகரும். தீபாவளி தீபாவளிப் பண்டிகை பற்றிப் பின்வரும் ஆவணக் குறிப்பு உள்ளது: " நிஜ ஆஸ்விஜ பகுள திரயோதசி முதல் நாள் திரயோதசி பகல் 25 நாழிகைக்கு மேல் செள. பாயி சாயபுமார்கள் எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்வது. அதே நாள் முன் இரவில் மாப்பிள்ளையின் பண்டிகை சூரியோதயத்திற்கு முன் எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்வது" - இதனால் தீபாவளி நாளின் முன்னாள் இரவிலே எண்ணெய் தேய்த்து நீராடுவது இவர்கள் வழக்கம் எனத் தெரிகிறது." பாவுபிஜ் பண்டிகை "1852 : மஹால் கர்ச்போதே கணக்கு.........பாவுபீஜ் பூரீ திவான் சாயேபிடம் செலவுக்காக ரூ. 310-8-0" என்ற குறிப்பு பாவுபீஜ் என்ற பண்டிகையைக் குறிப்பிடுகிறது. இந்தக் குறிப்புடன் பாவுபீஜ் என்பதைப் பற்றிய விளக்கமும் தரப்பெற்றுள்ளது. அவ்விளக்கம், ' தீபாவளி ஆகிக் கார்த்திகை சுக்லபக்ஷம் திவிதியை நாளில் தங்கை தன் தம்பி அல்லது தமையனுக்கு விருந்து அளித்துத் துணி 3. ச. ம. மோ, த. 18-107 (இமய மலைப்பகுதியில்) குஞ்சி என்ற இடத்தில் சர்ப்பக்கோயில் உள்ளது ; அங்கே உயிருள் ள சர்ப்பங்கள் வழிபடப்பெறுகின்றன - பக்கம் 7, ரீ குமரகுருபரர் (திருப்பனக் தாள்) - திங்கள் இதழ் - கயிலைச் சிறப்பிதழ் - செப்டம்பர் 1982. 4 5 " ... ... the Nag Panchami Festival occur on which Hindus go in search of snakes or have them brought to their houses by the "Sunpeli” the snake charmer. The snakes are then worshipped and offerings are made to them of milk – P. 235, Appendix D — Tree and Serpent Worship — James Fergusson (Nov. 1868 ) — Published by the Indological Book House, Varanasi, 1971. 6, 2-158 7. " On the night of Chathurdasi there is bath; the next day is Deepavali” - page 38, Deposition of M. S. Ghantigai, Ist witness for 1st & 2nd defen certs, O. S. No. 26 of 1912, 8. 4-849