பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

311 " 1823 : அஹில்யாபாயி சாயேப் அவர்கள் ஹரி தாள கா விரதத்துக்குப் பழ வகைறாக்கள்; தேங்காய் 520, வாழைப்பழம் 520, கொய்யா 520, விளா 520, வெள்ளரி 520, எலுமிச்சை 520, சர்க்கரை நாரத்தம் 520, பச்சை கொட்டைப் பாக்கு 520, நாகப்பழம் 520, மாதுளை 520, பேரீச்சம் 520, திராகூைடி 520, அம்சூல் 520, தமர்தம் 520, கடாரங்காய் 520, மா 520 ' என்ற குறிப்பு அவ்விரதத்தில் எவ்வெப்பொருள்கள் எந்த அளவுக்கு நிவேதனம் செய்தல் வேண்டும் என்பதைத் தெரிவிப்பதாக உள்ளது. எத்தனைப் பேருக்குத் தாம்பூலம் அளிக்கப்பெறும் என்று தெரிய வாய்ப்பில்லை. வேறொரு குறிப்பு, அமணி ராஜேசாயபு 1828இல் " பாத்ரபத சுத்த திருதியை"யில் இவ்விரத உத்யாபனம்" செய்ததாகக் குறிப்பிடுகிறது. இக்குறிப்பினைத் தொடர்ந்து "அனந்த சதுர்த்தசி விரத உத்யாபனம்" நடைபெற்றதாக உள்ளது. இவ்விரதம் பற்றி வேருென்றும் தெரியவில்லை. குலதர்ம பூஜை இது ஆண்டு முழுவதும் சந்திர மெளலீசுவர சுவாமிக்குக் குறிப்பிட்ட நாட்களில் செய்யப்பெறும் பூசையாகும். " அபிஷேக நிவேதனங்கள்' செய்து விட்டு அந்த இடத்தை விட்டு அந்தணர்கள் அகல்வர். பின்னர் அரசமா தேவிகள் வந்து சிறப்புப் பூசை செய்வர். காமாட்சி அம்பா பாயி அவர்கள் தம் வாழ்நாளில் இப்பூசையைச் செய்துள்ளார். ஆண்களுக்கும் இப்பூசைக்கும் தொடர்பில்லை." இறந்த அரசர்களுக்கும் சுமங்கலியாக இறந்த அரசமாதேவிகளுக்கும் உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கும். அவற்றுக்குப் பூசை செய்வர். இதுவே குலதர்ம பூசை எனப்படும்." * காமாட்சியம்பா பாயி சாயேபு சுவீகாரம் எடுத்துக்கொண்ட சரபோஜி அவர்களின் மனைவிகளுள் ஒருவர் எமுனாம்பா பாயி சாயேப் ஆவர்." 17. ச. ம. மோ. க. 5-40 18. ச. ம. மோ. த. 10-44, 19. உத்யாபனம்-விரதத்தை முடித்தல், 20, “Kuladarma Puja is the occasional puja performed on specific days from Chitrai to Panguni in the Chandramouleeswara Temple. The Abishegam and Neivedyam are done by Brahmins and then they leave. The yejaman ladies then have special pooja. Males have nothing to do with Kuladarma Pooja. While she lived Kamakshibai did the pooja–P. 28, Deposition of M. S. Ghantigai, O. S. 26 of 1912. 21. " Pooja to the TONKS is called Kulatharma Puja ” – P. 29, Deposition of Yogambal, O. S. 26 of 1912. 22. Deposition of A. 9, O. S. 26 of 1912.