பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

313 4, 2 வீசம் - மாகமாசம் வசந்த பஞ்சமி 1 — 4 - மாக சுத்த பெளர்ணமி 2} - மகா சிவராத்திரி 3, 3 வீசம் 4 - பால்குண சுத்த பெளர்ணமி 3. 1 வீசம் - ஒவ்வொரு மாத பெளர்ணமிக்கும் 1} - சனிப்பிரதோஷம், சோமவார அமாவாசை சோமவார அமாவாசை அமாவாசை அதாவது மறைமதி, திங்கட்கிழமை வந்தால் அன்று சுமங்கலிப்பெண்டிர் அசுவத்தப்பிரதகூடிணம் செய்வர்; அதாவது அரசமரத்தை 108 முறை வலம் வருவர். வலம் வருதலைக் கணக்கிடுவதற்கு ஏதாவது பழத்தையோ பொருளையோ இடுவர். பின்னர் அவற்றைச் சுமங்கலிகளுக்கு வெற்றிலைப்பாக்குடன் தருவர். இவ்விரதத்தைப் பாயிசாயேபுகள் நடத்தினர் என்பதை, " 1828 மாதுபூரீ சிறிய ஆவுசாயேப், அஹல்யா பாயி, சுலக்ஷணாம்பா பாயி அமணிராஜே, ராஜம்மாபாயி அமணிராஜே, ராஜகுமாரம்பா பாயி, இவர்களிடம் சோமவார அமாவாசைக்கு வழக்கப்படி கொடுக்கிறது" என்ற குறிப்பு: வலியுறுத்தும். கி. பி. 1808இல் யமுனாபாயி அஹல்யா பாயி ஆகிய இருவரும் " அசுவத்த பிரதட்சணத்துக்கு" வெள்ளி வாத்தியமும் ஜோடவியும் கொடுத்தனர் என்றும், ஒவ்வொருவருக்கும் 216 வீதம் மொத்தம் 432க்கு விலை 50 சக்கரம் என்றும், அப்பொருள்களை ஜம்தார்கானாவில் செய்து தரவேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கப்பெற்றது." நவராத்திரி நவராத்திரியின்போது அரசவையில் "பயில்வான்கள் ' தம் திறமையைக் காண்பிப்பர். கி. பி. 1797இல் 96 ஜோடிகள் தம் திறமையைக் காட்டி 970 சக்கரம் பரிசு பெற்றனர். இளைஞர்கள் 30 ஜோடிகள் 40 சக்கரம் தரப் பெற்றனர். கோயில் பயில்வான் 5 சக்கரம் அளிக்கப்பெற்றார்.: நவராத்திரியில் பல தெய்வங்களுக்கும் பூசைகள் நிகழ்த்தப்பெறும்." நவராத்திரி நாட்களில் நாடோறும் கோதானம் செய்வதுண்டு."அ நவராத்திரி காலத்தில் ஆயுதபூசை நடப்பதுண்டு. அன்று அரசர் இரதத்தில் ஏறிச் " சிலங்கண சாவடி" வரையிலும் சென்று அரண்மனைக்குத் திரும்புவதும் வழக்கம் ஆகும்." 26. ச. ம. மோ. த. 4-46 27. ச. ம. மோ. த. 20-7 28. ச. ம. மோ. த. 19-25 29. ச. ம. மோ. த. 4-11 29.அ. 11-57, 58 30, 8–67 40