பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 314 விசயதசமி நாளில் (1768இல்) டபீர் சுவாமிகள் (பந்த்) 1000 வராகன் மதிப்புடைய வைரப்பதக்கம் ஒன்று கொடுத்தார் என்ற ஆவணக் குறிப்பினால்,' மராட்டிய மன்னர்கட்குப் பெரிய அதிகாரிகள் காணிக்கை கொடுக்கும் வழக்கம் இருந்ததெனக் கொள்ளலாம். "1785 : ஸ்ர்க்காருக்கு விசயதசமி தினம் செலவு கல்லிழைத்த வைரக் காப்பு ஜோடி 1க்கு 2000 வராகன் ; பச்சை பிசுவா (சின்னத்தில்) கல்லிழைத்தது அக்கு 1000 வராகன்' - என்ற குறிப்பு மன்னர்கள் விலையுயர்ந்த அணிகலன்களையும் பெரிய அலுவலர்களுக்குப் பரிசாகத் தந்திருத்தல் கூடும் என ஊகிக்கலாம். மகரசங்கிராந்தி இது பொங்கல் பண்டிகையாகும். இது பற்றிய குறிப்பொன்று, " 1829 : கல்யாண மகாலில் மகர சங்கிராந்தி வெண்ணெயில் லிங்கம் செய்து கொடுக்கும் விரதத்தை உத்யாபனம் செய்யத் தகூழினை ரூ. 5-4-0" என்று காணப்பெறுகிறது." இது பொங்கல் திருநாளில் வெண்ணெயால் லிங்கம் செய்து தானம் செய்தலைக் குறிப்பிடுகிறது. சங்கிராந்தி அதாவது பொங்கல் நாளில் செய்யும் வழிபாடு பிறர் செய்யும் வழிபாட்டு முறையினும் வேறு பட்டுள்ளதாகத் தெரிகிறது. அ பிள்ளை யார் சதுர்த்தி பிள்ளையார் சதுர்த்தி விழா கி. பி. 1834க்குரிய குறிப்பில் உள்ளது.' சுஹர்சன் 1254 அதாவது கி. பி. 1853இல் விநாயக சதுர்த்தி விழா இருபத்திரண்டு நாட்கள் நடந்தமையும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாடகம் நடிக்கப் பெற்றமையும், ஒராவணத்தால் அறியப்பெறும். நாடகம் நடத்திய தோடு நாடக சாலையில் சில பெண்கள் நாட்டியம் ஆடினர்." 31, 2–6 32. 2-13 33. 4-224; “We have Sankranthi. We do Sakthi Pooja. New pots are filled with rice etc., and ornamented and worshipped. The Lingam is made of butter, Parvathi of jaggery and worshipped and presented to Brahmins’ - Page 3, Deposition of Krishnaswami Bhosle, 13th witness, O. S. No. 26 of 1912. 33 *, “Sankranti is common but the nature of the Puja differs. We worship the Sun. They have Navanitha Lingam and worship with certain fruits. I don't know the details. I have not seen the Puja” - Deposition of D. W. 24, Saminatha Sastrigal, O. S. No. 26 of 1912. 34. 5–3 35. 12.864, 865, 366. இசை நாடகம் என்ற 16 ஆம் கட்டுரை, அடிக்குறிப்பு எண் 108 முதல் 121 வரை காண்க.