பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 செய்தாற்போல அந்தத்தேரின் வேலையைப் பற்றின கரஸ்பாண்டென்ஸாம் ஏதாவது இருக்கிறதா என்று சொன் ன படி தேடினதில் இதுவரை அகப்படவில்லை ' என்ற இக்குறிப்பால் திருவிடைமருதுர்த் தேர் பிரதாபசிங்கரால் செய்து அளிக்கப்பெற்றது எனத் தெரிகிறது. அத்தேரைப்பற்றி ஏதேனும் வழக்கு வந்திருக்கக்கூடும் அதற்குச் சிவாஜி அரசர் தம் எதிர்ப்புத் தெரிவித்தனர் போலும். இரண்டாம் துளஜா பட்டத்திற்கு வந்தமை : “ 1764 துளஜா மகாராஜாவின் சமாசாரம் : சுபானு வருஷம் துளஜா மகாராஜாவிற்குப் பட்டாபிஷேகம் மார்கசீர்ஷ வத்யம் 13ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ' என்றொரு குறிப்பால் ' இரண்டாம் துளஜா பட்டத்துக்கு வந்த தேதி 18-12-1763 என்று தெரியவருகிறது . மனைவியர் : "1776 : துர்முகி வருஷம் கார்த்திக சுத்த திருதியை வியாழக்கிழமை நடந்த திருமணங்கள்: (1) சேகோஜி மாஹடிக் அவர்களின் மகள் சுலக்ஷணாம்பாபாயி ; (2) காசிராவ் இங்க்ளே அவர்களின் மகள் மோஹனாபாயி" என்ற குறிப் பால்" 14-11-1776இல் இரண்டு: திருமணங்கள் செய்துகொண்டார் என்றும் தெரிகிறது. அப்துல் பிரதாபசிம்ஹர் மேற்குறித்த மோகனாபாயி வயிற்றில் அப்துல் பிரதாபராம் பிறந்தார் என்று போன்ஸ்லே வம்ச சரித்திரம் கூறும்." ஆனால் மோடி தமிழாக்கக் குறிப்பில் அப்துல் பிரதாபசிம்ஹஜி என்று இவர் குறிக்கப்பெற்றுள்ளார். இவரது அப்தபூர்த்தி (ஆண்டுநிறைவு) 1779 புஷ்யசுத்த பஞ்சமி என்று ஒரு குறிப்பில் அ உள்ளது. எனவே அப்துல் பிரதாபசிங்கர் 1778 புஷ்யசுத்த பஞ்சமியில் பிறந்தனர். ஆதல் வேண்டும்; அதாவது 3-1-1778." இவருக்கு முடியிறக்குதல் 1779 ஜமாதி லெளவல் தேதி 10 என்று ஒரு குறிப்புக்கூறும்.' 43. 3-225, 226 44. P. 329, Vol. VI, 1600 to 1799, Indiam Ephemeris, L. D. Swamikannu Pillai 45. 3-228 ; பக்கம் 125, போன் ஸ்லே வம்ச சரித்திரம் (தமிழ்) 46. P. 342, Vol. VI, 1600 to 1799, Indiam Ephemeris, L. D. Swamikanmu Pillai 47. பக்கம் 125 47.அ. ச. ம. மோ. க. 18-26 48. Lisih 858, Indian Ephemeris - L. D. S. 49. *. Lo. Gudr. s. 18-19