பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 என்ற ஆணை இதற்குச் சான்று பகரும். மேலும் ஒரு பெண் கோயிலில் பொட்டுக் கட்டிக் கொள்வதற்குக் கோயிலிலிருந்து ஒரு தொகைகொடுக்கப் பெறுவாள் என்றும் அறியலாம்; மற்றும் அவளுக்கு மாத ஊதியம் உண்டு. கோயிலுக்கு இத்தகையோர்களை விலைக்கு வாங்குவதும் உண்டு என்று தெரிகிறது. சரபேந்திர பட்டணத்தில் ஒரு தாசி-ரமாமணி என்ற பெயருடையவள் - அவளுடன் ஐந்து பேர்களைச் சிதம்பரேசுவரர் கோயிலுக்குப் பொட்டுக் கட்டி வைக்க அரண்மனையாரவர்கள் விலைக்கு வாங்கினார்கள். மாதம் 1க்கு ஒவ்வொருவருக்கும் 5 பணம் இரண்டு கலம் நெல் வீதம் சம்பளம் கொடுக்கப்பெற்றது." இவர்கள் கோயிலில் பொட்டுக் கட்டிக் கொண்டாலும் இவர்கட்குக் குழந்தைகள் இருந்தன. இதனை, " திருவிழிமிழலையில் இருக்கும் தாசி சின்னிகுட்டி மகள் செல்லக்குட்டி மிகுந்த வணக்கத்துடன் எழுதிக்கொண்டது " என்ற குறிப்பால் தெரிந்துகொள்ளலாம்." தந்தை பெயர் கூறாமல் தாயின் பெயர் கூறியுள்ளமையால் அன்னோர் , பதியிலார் ' என்பது தெள்ளிதின் விளங்கும். בד"ץ " கோவிந்தசாமி மாமியார் ஆகிய தாசி அன்னத்தைக் கொண்டு ருசுப்படுத்தச் சிந்தமாய் இருக்கிறேன். ' என்றமையால் தாசிகள் தம் பெண்களுக்குத் திருமணம் செய்வித்தலும் உண்டு என்று தெரியவருகிறது. எத்தகைய பெண்களுக்குத் திருமணம் செய்விப்பர் என்பது கவனிக்கத்தக்கது. தமக்குப் பிறக்கும் பெண் குழந்தைகளில் 'அரூபமாயும் தேவடியாள் தனத்துக்கு யோக்கியமில்லாதவளாகவும்" இருந்தால் அத்தகைய பெண்களுக்குக் கல்யாணம் செய்து வைப்பர் போலும். பெண்கள் திருமணம் ஆவதற்குள்ளாகவே அதாவது சிறு வயதினராக இருக்கும் போதே பொட்டுக் கட்டுவர். இது, '1842: எமுனாம்பாபுரம் சந்தானராமசுவாமி கோவிலில் பொட்டுக் கட்டிக் கொண்ட அன்னம் தாசி - வயது 10 - மாதம் 1க்கு நெல் கலம் 1; தினமும் சாதம் பட்டை 1, ' என்பதால் உறுதி எய்தும். 3. 7-691 (அடிக்குறிப்பு 10க்குரியது காண்க) 4. 6-418 5. 6-408 6. 6-412 7. 6-418 8. ச. ம. மோ. த், 2-41.