பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 கி. பி. 1814இல் மதுரையைச் சேர்ந்த கள்ளிக்கோட்டை கள்ளர் சாதி அங்காளி என்பவளின் மூன்று மாதத்துக்குழந்தையைக் குழந்தைக்காக 5 சக்கரம், புடவைக்காக 1 சக்கரம் கொடுத்துத் தஞ்சாவூர் ஃபகீர் மகமத் சமுத்வான் வாங்கி உள்ளார்." ஃபகீர் முகமத் வாங்கியது, சமயமாற்றம் செய்வதற்காக இருக்கலாமோ என்று ஐயப்படுதற்கு ஏதுவாகும். H கி. பி. 1785இல் திருமுல்லைவாசல் மாரியம்மன் கோயில் தெரு செவதாயி என்பவள் தன் உடன்பிறந்தான் பெண்ணைத் தரங்கம்பாடி வெள்ளைக் காரன் உஸ்மானுக்கு விற்றுவிட்டாள். 6 சக்கரம் 1 பணம் கொடுக்கப்பட்டது. கம்பெனி முத் திரைக் காகிதத்தில் எழுதிக்கொண்டு, பாதிரி கோயிலுக்கு அழைத்துச் சென்று "ஞானஸ்நானம் செய்வித்து வேதம் சொல்லித் தம் மதத்தில் சேர்த்துக் கொண்டார்; தம் வீட்டுப் பையனுக்குத் திருமணம் செய்விக்கலாம் என்ற 4 ஆண்டுகள் வளர்த்தார், நகை முதலியன போட்டார். ஆனால் அந்தப் பெண் ஒடிப்போய் விட்டாள். எனினும் சீகாழியில் பிடிபட்டாள்" - இச்செய்தியால் சமய மாற்றம் செய்யவும் பெண்களை விலைக்கு வாங்கினர் என்பது உறுதிப்படும். கோட்டைக்கு வெளியே குடியிருக்கும் வெள்ளாளத்தி, நல்லத்தாய் என்பவளின் கருமை நிறம் பொருந்திய 9 மாதப் பெண் குழந்தையை ஜய வாசல் (கீழவாசல்) கடையில் வெள்ளாளன் வேலாயுதம் என்பவன் 27பணத்க்கு வாங்கின்ான். இதற்குக் கொத்தவால் சாகூகி போட்டுக் கொடுத்தான் " - இதனாலும் இதற்கு முன் சொல்லப்பட்ட விற்பனைச் செய்தியாலும் விலைக்கு வாங்கும்பொழுது முத்திரைக் காகிதத்தில் எழுதிக் கையொப்பம் பெறும் வழக்காறும் தெரியவருகிறது.* பெண்களை அடைமானம் வாங்கிப் பின் விற்கும் வியாபாரமும் நடை பெற்று வந்ததாகத் தோன்றுகிறது. புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் சிலம்பாயி, இவருக்கு 9 வயது மகள் ாங்காயி. இவர்களைத் தாசி விசாலாட்சி என்பாள் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். சிலம்பாயிக்கு 3 ரூபாய்க்கு ஒரு சேலை எடுத்துக் கொடுத்துப் பிள்ளையைத் தன்னிடம் இருக்கக்செய்து, "ரூ.3 கொடுத்துவிட்டுப் பிள்ளையை அழைத்துச் செல்லலாம்" என்றாள். சின்னாட்பின்னர்ச் சிலம்பாயி ரூ. 3; கொடுத்துவிட்டுத் தன் மகளை அனுப்புமாறு கேட்டாள். இதற்கிடையில் தாசி விசாலாட்சி, ரங்காயி என்ற அந்தப்பெண்ணைச் சர்க்காருக்கு 400 ரூபாய்க்கு விற்றுவிட்டாள். ஆகவே சிலம்பாயி ரெஸிடெண்டிடம் மனுச் செய்து கொண்டாள். 20. ச. ம. மோ. த. 2-16 21. ச. ம. மோ, த, 6-46 22. 5–294, 295 23. ச. ம, மோ, த, 8-18