பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 லாடு பாய், பாயம்மா பாய் என்றிருவர் குறிக்கப்பெறுகின்றனர். இவர்கள் 1828இல் ரூ.10,000 (சர்க்காருக்கு) 3 வட்டி வீதம் கடன் கொடுத்தனர்.அ லாடு பாய், சரபோஜி இறந்தபிறகும் கி. பி. 1836இல் குறிக்கப்பெறுகிறார்: ' கல்யாண மகால் - துலா காவேரி ஸ்நானம் - கடைமுழுக்கு - தான தருமத்துக்கு லாடு பாயி அக்காவுக்கு ரூ. 25 கொடுக்கப்பட்டது. பாயிமார் 23க்கு ஒவ்வொருவருக்கும் ரு. 15 வீதம் 545 கொடுக்கப்பட்டது." என்ற குறிப்பால் லாடுபாயுடன் மேலும் 23பேர் இருந்தனர் என்பது தெரிய வரும். மேற்குறித்த | பாயிமார்களில் சிலர் உபதேசம் பெற்றனர் என்று ஓராவணக்குறிப்புள்ளது."அ அவர்கள் பெயர் பின்வருமாறு: கண்டகிபாயி, சரசுவதிபாயி, நர்மதாபாயி, கோதாவரிபாயி, சுப்பாபாயி காமாட்சிபாயி; கிரிபாயி, பவானிபாயி; சாவித்திரிபாயி, சோனபத்ராபாயி; சுவர்ணரேகாபாயி; அருந்ததிபாயி: திரிவேணிபாயி. பலவகை நாணயங்கள் சர்க்காரில் சேமித்து வைக்கப்பட்டன. அவற்றின் பெயர் விவரம் மட்டும் ஓர் ஆவணத்தில் உள்ளது." அவை கல்யாண மகாலில் வைக்கப்பெற்றிருந்தனவாதல் வேண்டும் என்பது ' கல்யாணமகாலில் நாணயவாரி' என்ற குறிப்பால் அறியலாம். மங்கள விலாஸ் இரண்டாம் சிவாஜியின் காமக்கிழத்தியர் பலர் ஆவர்; அவர்கள் மங்களவாசம் அல்லது மங்களவிலாஸ்’ என்ற பெயரால் குறிக்கப்பெற்றனர். இரண்டாம் சிவாஜி இறந்தபொழுது மங்களவிலாஸ் " சத்மத்தில் ' 42 பேரும் அவர்களுக்கு பிறந்த 5 ஆண் குழந்தைகளும் 11 பெண் குழந்தைகளும் இருந்தனர் என்று தெரிகிறது." " மங்களவாசத்தில் எத்தனைப் பேர் இருக்கிறார்கள் ? " என்று ரெஸிடெண்டு கேட்டபொழுது, " மங்களவாசத்தார் 42 பேர்கள் ; அவர்கள் 4.அ. 4-124, 127 5. ச. ம. மோ. க. 8-26 5.அ. ச. ம. மோ, த. 8-3 6. 7-569 7. " Sivaji had a large seraglio to which he gave the name of Mangala Vilas and which at the time of his death contained 60 women and with 17 children born among them " - P. 828, Tanjore Dt. Manual 8. Page L. xxxvii, para 14: "The persons who are included by Mr. Phillips in his list A of the immediate family are – ... 9. The late Rajah Sevajee's seraglio in number 59 persons including apparently 6 natural sons and 11 natural daughters of the Rajah " - Hickey - The Maratha Principality - Appendix (1874)